/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'திருப்பூர் பில்டர்ஸ் கிளப்' நிர்வாகிகள் பதவிக்காலம் 2 ஆண்டுகளாக மாற்றம்

ADDED : செப் 30, 2024 06:48 AM

திருப்பூர்,: திருப்பூர் பில்டர்ஸ் கிளப் நிர்வாகிகள் பதவிக்காலம், இரண்டு ஆண்டுகள் என்று மாற்றம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர் 'பில்டர்ஸ் கிளப்', 10வது மகாசபை கூட்டம், கணியாம்பூண்டி பில்டர்ஸ் கிளப் மண்டபத்தில் நேற்று நடந்தது. தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். செயலாளர் செல்வராஜூ, ஆண்டறிக்கையை வாசித்தார். பொருளாளர் பெர்னார்டு, சங்க வரவு - செலவு அறிக்கையை சமர்ப்பித்தார்.
சங்கத்தின் ஆடிட்டர் மற்றும் சட்ட ஆலோசகர்களை நியமனம் செய்வது; 2025-26ம் ஆண்டுக்கு, புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வது; திருப்பூர் பில்டர்ஸ் கிளப் நிர்வாகிகள் பதவிக்காலம், இரண்டு ஆண்டுகள் என்று மாற்றம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சங்க உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். வாரிசுகளை நியமிக்கவும் அனுமதிப்பது, சங்க கட்டடத்தின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது, கிளப் உறுப்பினர்கள் மன மகிழ்ச்சிக்காக, உள்விளையாட்டை ஊக்குவிப்பது மற்றும் தேவையான விளையாட்டு உபகரணங்களை வாங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னாள் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், புதிய உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர்.