sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள்  19.55 லட்ச ம் பேர்! இறுதிப்பட்டியலில் பெண்கள் அதிகம்

/

மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள்  19.55 லட்ச ம் பேர்! இறுதிப்பட்டியலில் பெண்கள் அதிகம்

மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள்  19.55 லட்ச ம் பேர்! இறுதிப்பட்டியலில் பெண்கள் அதிகம்

மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள்  19.55 லட்ச ம் பேர்! இறுதிப்பட்டியலில் பெண்கள் அதிகம்


UPDATED : பிப் 24, 2026 07:35 AM

ADDED : பிப் 24, 2026 05:35 AM

Google News

UPDATED : பிப் 24, 2026 07:35 AM ADDED : பிப் 24, 2026 05:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலில், 19 லட்சத்து 55 ஆயிரத்து 283 பேர் வாக்காளராக இடம்பெற்றுள்ளனர்.

கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் மனிஷ் நாரணவரே, மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

எட்டு தொகுதிகளில், 2,822 ஓட்டுச்சாவடிகளில், 9 லட்சத்து 44 ஆயிரத்து 178 ஆண்கள்; 10 லட்சத்து 10 ஆயிரத்து 853 பெண்கள்; 252 திருநங்கைகள் என, மொத்தம் 19 லட்சத்து 55 ஆயிரத்து 283 பேர், இறுதி வாக்காளர் பட்டியலில் உள்ளனர். எஸ்.ஐ.ஆர்.க்கு பின், டிச. 19ல், வெளியான வரைவு பட்டியலில், எட்டு சட்டசபை தொகுதிகளிலும், மொத்தம் 18 லட்சத்து 81 ஆயிரத்து 144 வாக்காளர் இருந்தனர்.

சுருக்கமுறை திருத்தம் வாயிலாக 94 ஆயிரத்து 8 பேர், சேர்க்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் 920 பேர்; இடம்பெயர்ந்தோர் 18 ஆயிரத்து 595 பேர்; இரட்டைப்பதிவு வாக்காளர் 354 பேர் என, மொத்தம் 19 ஆயிரத்து 869 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில், எஸ்.ஐ.ஆர்.க்கு முன்பு 24 லட்சத்து 44 ஆயிரத்து 929 வாக்காளர் இருந்த நிலையில், எஸ்.ஐ.ஆர்.ன் போது, 5 லட்சத்து 63 ஆயிரத்து 785 பெயர்கள்; சுருக்கமுறை திருத்தத்தில், 19 ஆயிரத்து 869 பெயர்கள் என, மொத்தம் 5 லட்சத்து 83 ஆயிரத்து 654 பெயர்கள், பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

சுருக்கமுறை திருத்தத்தில், 94 ஆயிரத்து 8 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதையடுத்து, தற்போது வெளியாகியுள்ள இறுதி பட்டியலில், 19 லட்சத்து 55 ஆயிரத்து 283 பேர் வாக்காளராக இடம்பெற்றுள்ளனர்.

திருப்பூர்: கலெக்டர் மனிஷ் நாரணவரே இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டபோது, அரசியல் கட்சியினர் பங்கேற்று, தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

காங். கட்சியை சேர்ந்த சுந்தர்ராஜன், ''திருப்பூர் தெற்கு தொகுதியில், பாகம் எண் 89, பிரிவு - 1ல், கருவம்பாளையம் பள்ளி வீதி எனவும், பிரிவு - 4ல் கருவம்பாளையம் ஆரம்ப பள்ளி வீதி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கருவம்பாளையம் பள்ளி வீதி என்பதே இல்லை. அதேபோல், மற்ற ஓட்டுச்சாவடிகளில் உள்ள வாக்காளர் பெயர், எங்கள் ஓட்டுச்சாவடிகளில் உள்ளது. இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போதும் அதே நிலையே நீடிக்கிறது. இதனை எப்போது தான் சரி செய்யப்போகிறீர்கள்'' என, கூறி கலெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

'சிறப்பு கவனம் செலுத்தி, சரி செய்யப்படும்' என கலெக்டர் பதிலளித்தார்.

கம்யூ., கட்சியினர், 'வாக்காளர் பட்டியலை வெளியிடுவதற்கு முன், அனைத்து கட்சி பிரதிநிதிகளும் வந்துவிட்டனரா, பட்டியலை வெளியிடலாமா என, கேட்டிருக்கவேண்டும். ஆனால், அவ்வாறு கேட்காமல், கலெக்டர் வந்த உடனேயே பட்டியலை வெளியிடுவது தவறு. தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் முறைப்படி நடக்கவில்லை' என கூறி, கலெக்டரிடம் வாக்குவாதம் செய்யதனர். இதனால், கலெக்டர் அலுவலகத்தில் சில நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது.

மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், கடந்த 2025 டிச. மாதம் வெளியான வரைவு பட்டியலில், மொத்தம், 18 லட்சத்து 81 ஆயிரத்து 144 வாக்காளர் இடம் பெற்றிருந்தனர். தற்போதைய இறுதி பட்டியலில், 19 லட்சத்து 55 ஆயிரத்து 283 பேர் வாக்காளராக உள்ளனர். சுருக்கமுறை திருத்தத்தில், 94 ஆயிரத்து 8 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தின் மொத்த வாக்காளரில், 85 வயதுக்கு மேற்பட்ட மிக மூத்த வாக்காளர், 7 ஆயிரத்து 57 ஆண்கள், 7 ஆயிரத்து 905 பெண்கள், ஒரு திருநங்கை என, 14 ஆயிரத்து 963 பேர் உள்ளனர். 6 ஆயிரத்து 327 ஆண்கள், 5 ஆயிரத்து 172 பெண்கள் என, மாற்றுத்திறனாளிகள், 11 ஆயிரத்து 499 பேர், முப்படைகளில் பணிபுரியும் சர்வீஸ் வாக்காளர்கள், 172 ஆண்கள், 17 பெண்கள் என, 189 பேர் உள்ளனர். 18 - 19 வயதுக்கு உட்பட்ட இளம் வாக்காளர்களி ல், 20 ஆயிரத்து 553 ஆண்கள், 18 ஆயிரத்து 993 பெண்கள், 4 திருநங்கை என, 39 ஆயிரத்து 541 பேர் உள்ளனர்.

தொகுதிவாரியான இறுதி வாக்காளர் பட்டியல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வழங்கப்படும். தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் வரை, பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தத்துக்கான படிவங்கள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

- மனிஷ் நாரணவரே, கலெக்டர்.

 முதல் வாக்கு!


முதல் முறையாக வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இளம் வாக்காளர்களின் பேட்டி


ஆர்வம்

தேர்தல் நடக்கும் நாள் ஒரு நாள் ஸ்கூல், காலேஜ் லீவு விடுவாங்க என்பது மட்டுமே இதுவரை தெரிந்திருந்தது. இனி, நானும் சென்று முதல்முறை ஓட்டு போட போகிறேன் எனும் போது ஆர்வமாக உள்ளது. ஓட்டுச்சாவடி மையம், ஓட்டுச்சாவடியை நாங்கள் புதியதாக பார்க்க போகிறோம்.



Image 1540499கஜனியாஸ்ரீடி.எஸ்.பி. நகர்:

எதிர்பார்ப்பு

செய்தித்தாள்களிலும், டிவிக்களிலும் தேர்தல் செயல்பாடுகளை பார்த்திருக்கிறோம். மாதிரி ஓட்டுச்சாவடி பற்றி கல்லுாரியில் கூறியுள்ளதை கேட்டுள்ளோம். ஆனால், ஓட்டளிக்க செல்ல போகிறோம் என்பதாலும், நிறைய புதிய விஷயங்களை நேரில் காண முடியும் என்பதாலும், மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறோம்.



Image 1540500ரூபினா, பெருமாநல்லுார்:

மகிழ்ச்சி

ஒவ்வொரு வாக்காளரின் ஓட்டும் முக்கியம் என்பதால், இப்போதிருந்தே தேர்தல் கமிஷன் பணிகளை துவங்கியுள்ளது. தேர்தலை கட்சியினர் திருவிழாவாக கொண்டாட தயாராகி விட்டனர். திருவிழாவில் நானும் பங்கேற்க போகிறேன் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.



Image 1540501நவீன்குமார், ஆதியூர்:

காத்திருப்பு

ஒவ்வொரு கட்சியும், தலைவரும், வேட்பாளரும் தேர்தல் பணி செய்வதை பார்க்கும் போது, புதுமையாக உள்ளது. டிவி, மொபைல்போன், சமூக வலைதளங்கள் எங்கு திரும்பினாலும், கட்சியினரின் தேர்தல் குரல் கேட்டு கொண்டிருக்கிறது. வாக்காளர் குரலை ஓட்டுக்காக பதிவு செய்யும் நாளுக்காக காத்திருக்கிறேன்.



Image 1540503விக்னேஷ், செஞ்சேரிமலை:

பெருமை

ஓட்டளிக்க தகுதி பெற்றவர்களுக்கு கட்சியினர் பல்வேறு பரிசுகளை வழங்குகின்றனர். ஓட்டளிக்கும் ஒவ்வொருவருக்கும் வெற்றியை தீர்மானிக்கும் சக்தி உள்ளது. நானும் ஒரு வாக்காளர் என்பதால், வாக்காளர் அடையாள அட்டை பெற்றதில், ஓட்டளிக்க செல்வதை பெருமையாக கருதுகிறேன்.



Image 1540502கவிப்பிரியா, கருமாரம் பாளையம்:






      Dinamalar
      Follow us