/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு ஏ.சி. பஸ் அறிவிப்பு அதிகாரிகள் அலட்சியம்
/
அரசு ஏ.சி. பஸ் அறிவிப்பு அதிகாரிகள் அலட்சியம்
ADDED : பிப் 23, 2026 06:21 AM

திருப்பூர்: திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, காங்கயம், வெள்ளகோவில், கரூர் வழியாக திருச்சிக்கு ஏ.சி. பஸ் இயக்கப்படுகிறது. காலை, 6:30 மணி, மதியம், 12:55, மாலை, 3:00 மணி, இரவு, 8:30, 11:00, 11:30 மணிக்கு இந்த பஸ்கள் புறப்படுகிறது.
திருச்சிக்கு, 200 ரூபாய் கட்டணம். திருச்சி மட்டுமின்றி, இங்கிருந்து நேரடியாக தஞ்சாவூர், கும்ப கோணம் வழியாகமயிலாடுதுறைக்கும் பஸ் இயக்கப்படுகிறது.
குளிர் குறைந்து வெயிலின் தாக்கம் அதிகமாகி வரும் நிலையில், ஏ.சி. பஸ்கள் பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய பஸ்களை தேடி பயணிகள் ஏறுகின்றனர்.
ஆனால், பயணிகள் இந்த பஸ் இயக்கம், நேரம் குறித்து தெளிவாக தெரிவிக்காமல், புதிய பஸ் ஸ்டாண்டில் சிறிய அளவில் ஒரு பேப்பரில் கையால், ஏ.சி. பஸ் புறப்படும் நேரம், கட்டணம் குறித்து எழுதி ஒட்டப்பட்டுள்ளது. கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் பஸ்கள் விபரமும் இவ்வாறே எழுதி ஒட்டப்பட்டுள்ளது.
தனியார் பஸ் நிறுவனங்கள், பயணிகளை ஈர்க்க பல்வேறு யுக்திகளை கையாள்கின்றன. அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தெளிவான அறிவிப்புகளை வைக்கக்கூடவா முடியாது?

