/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பட்டொளி வீசிப் பறக்கிறது மூவர்ணக் கொடி
/
பட்டொளி வீசிப் பறக்கிறது மூவர்ணக் கொடி
ADDED : ஆக 14, 2025 09:28 PM

இ ன்று சுதந்திர திருநாளை முன்னிட்டு, திருப்பூரில் தேசியக்கொடி விற்பனை அமோகமாக நடந்துள்ளது.
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், தேசிய கொடி தயாரித்து விற்பனை செய்து வரும் சரவணக்குமார் கூறியதாவது:
கடந்த, 25 ஆண்டாக என் தந்தை தேசியக்கொடி தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்தார். அவருக்கு பின், நான் இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறேன்.
கதர் மற்றும் பாலியஸ்டர் தயாரிப்பு கொடிகளை தான் மக்கள் அதிகம் வாங்குவர். பாலிதீன் தயாரிப்பு கொடிகளை தற்போது மக்கள் விரும்புவதில்லை; தவிர்க்கின்றனர். இது, ஒரு நல்ல மாற்றமாக இருக்கிறது.பொதுவாக பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் தான் அதிகளவில் கொடிகளை வாங்குவர். சமீப ஆண்டுகளாக, பனியன் நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனத்தினர் அதிகளவு கொடிகளை வாங்குகின்றனர். கடந்த, 3 ஆண்டுக்கு முன், 75வது சுதந்திர தினம், அமுது பெருவிழாவாக கொண்டாடப்பட்டது. மத்திய அரசின் அறைகூவலுக்கு ஏற்ப, வீடுகள் தோறும், மக்கள் கொடியேற்றினர். அந்தாண்டு கொடி விற்பனை அமோகமாக இருந்தது. இவ்வாறு, அவர் கூறினார்.
கலங்காத உள்ளம் கொண்டோரே
இறுதி வெற்றிக்கு உரியவர்கள்
வெறும் அரசியல் சுதந்திரத்தால் தேசம் திருப்தி அடையாது. வெற்றி தோல்வி முக்கியமில்லை, துணிந்து சண்டையிடுவதுதான் முக்கியம்.. ஒரு நபர் ஒரு யோசனைக்காக இறக்கலாம்; ஆனால் அந்த யோசனை, அவரது மரணத்திற்குப் பிறகு, ஆயிரம் உயிர்களில் அவதாரம் எடுக்கும். கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்!
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.