/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பயன்பாடின்றி வீணாகி வரும் பஸ் ஸ்டாண்ட் நடை மேம்பாலம்
/
பயன்பாடின்றி வீணாகி வரும் பஸ் ஸ்டாண்ட் நடை மேம்பாலம்
பயன்பாடின்றி வீணாகி வரும் பஸ் ஸ்டாண்ட் நடை மேம்பாலம்
பயன்பாடின்றி வீணாகி வரும் பஸ் ஸ்டாண்ட் நடை மேம்பாலம்
ADDED : ஆக 13, 2025 08:21 PM

உடுமலை; உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, அபரிமிதமான போக்குவரத்து உள்ள பொள்ளாச்சி - பழநி ரோட்டை பயணியர் எளிதாக கடக்கும் வகையில், 5 ஆண்டுக்கு முன், 1.50 கோடி ரூபாய் செலவில், லிப்ட் உடன் கூடிய நடைமேம்பாலம் அமைக்கப்பட்டது.
இந்த ரோடு, தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், இதனை முறையாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து, தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
இதனால், அரசு நிதியும், நடை மேம்பாலத்திற்கான கட்டமைப்புகளும் பயன்பாடின்றியும், பயன்படுத்தாமலும் வீணாகி வருகிறது.
அதே போல், பஸ் ஸ்டாண்ட் மற்றும் கடை வீதிகளுக்கு செல்லும் பொதுமக்களும் ஆபத்தான முறையில், ரோட்டை கடக்கும் அவல நிலை உள்ளது.
எனவே, நடை மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், பழநி - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை, பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளதால், ரோடு முழுவதும் குண்டும், குழியுமாக மாறி, விபத்துக்களும் அதிகரித்து வருகிறது. ரோட்டை புதுப்பிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.