/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'டாலர்' மதிப்பு உயர்ந்தது... ஏற்றுமதியாளர்களுக்கு தற்காலிக லாபம் தான்!
/
'டாலர்' மதிப்பு உயர்ந்தது... ஏற்றுமதியாளர்களுக்கு தற்காலிக லாபம் தான்!
'டாலர்' மதிப்பு உயர்ந்தது... ஏற்றுமதியாளர்களுக்கு தற்காலிக லாபம் தான்!
'டாலர்' மதிப்பு உயர்ந்தது... ஏற்றுமதியாளர்களுக்கு தற்காலிக லாபம் தான்!
ADDED : நவ 25, 2024 11:04 PM

திருப்பூர்; இந்திய ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வதால், இறக்குமதி வர்த்தகத்தில் தான் பாதிப்பு ஏற்படும். ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பில்லை; தற்காலிகமான லாபமாகத்தான் இருக்கும் என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வார நிலவரப்படி அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 84.42 ரூபாயாக உள்ளது. திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், அமெரிக்க டாலர் மதிப்பின் அடிப்படையில் நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, முக்கிய நாடுகளுடன் இணைந்து, ரூபாய் மதிப்பில் வர்த்தகம் செய்யும் திட்டமும் பரிசீலனையில் இருந்து வருகிறது. டாலர் மதிப்பில் வர்த்தகம் செய்வதால், டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரியும் போது, ஏற்றுமதியாளர்களுக்கு தற்காலிகமான லாபமாகத்தான் இருக்கிறது; சிலவகை சவால்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஏற்றுமதி வர்த்தகம், ஒப்பந்த அடிப்படையில் நடப்பதால், அமெரிக்க டாலர் மதிப்பு உயரும் போது, சரக்கு அனுப்பிய பின், வழங்கப்படும் டாலர்களை ரூபாயாக மாற்றும் போது, ரூபாய் மதிப்பில் உபரி தொகை கிடைக்கும். இருப்பினும், மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய வழக்கத்தைவிட கூடுதல் தொகை செலவிட வேண்டியிருக்கும்.
'பார்வார்டு கான்ட்ராக்ட்'
ஏற்றுமதி ஆர்டர் உறுதி செய்யும் போது, நம் நாட்டு வங்கியுடன், 'பார்வர்டு கான்ட்ராக்ட்' செய்து, வங்கியில் டாலர்களை முன்பதிவு செய்யலாம். ஒப்பந்தம் செய்ததை காட்டிலும் அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்தாலும் சரி, சரிந்தாலும் சரி, பாதிப்புகளை தவிர்க்க, ஏற்றுமதியாளர்கள் 'பார்வர்டு கான்டராக்ட்' செய்து கொள்கின்றனர். இதன்மூலமாக, ஒப்பந்தம் செய்த தொகை உறுதியாக கிடைக்கும். ஏற்றுமதியாளர்களுக்கு லாபம் என்பதை காட்டிலும், இதனால், ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. ரூபாய் மதிப்பு உயரும் போது, ஏற்றுமதியாளருக்கு இழப்பு ஏற்படும். அதற்காக, வங்கியுடன் ஒப்பந்தம் இருந்தால், நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.