/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாக்காளர் பட்டியல் 'செம்மை' இல்லை... கொடுமை!
/
வாக்காளர் பட்டியல் 'செம்மை' இல்லை... கொடுமை!
ADDED : டிச 26, 2024 11:47 PM

''நுாறு சதவீதம் செம்மைப்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்'' என்று அதிகாரிகள் சொல்லலாம்; அப்படியே நம்புவதற்கு வாக்காளர்கள் தயாராக இல்லை.
ஒரு பானை சோற்றுக்கு, ஒரு சோறு பதம்; திருப்பூர், கருவம்பாளையத்தில், 40 ஆண்டுகளாக சொந்த வீட்டில் வசித்து வரும், 80 வாக்காளர்கள், அருகருகே உள்ள ஓட்டுச் சாவடிகளுக்கு சிதறடிக்கப்பட்டிருக்கின்றனர். இதை ஆதாரபூர்வ ஆவணமாக தயாரித்து, தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியிருக்கிறார், அப்பகுதி குடியிருப்புவாசியும், முன்னாள் நகர காங்., தலைவருமான சுந்தர்ராஜன்.
மேற்கு பிள்ளையார் கோவில், முதல் மற்றும் இரண்டாவது வீதியில் வசிக்கும் வாக்காளர்கள், அதுவும், ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள், ஒரே பாகத்தில் இடம் பெறாமல், 8 பாகங்களில், வெவ்வேறு ஓட்டுச் சாவடிகளில் சிதறியுள்ளனர். 'கருவம்பாளையம் எக்ஸ்டன்சன் முதல் வீதி' மற்றும் 'கருவம்பாளையம் பிரிவு முதல் வீதி' என, ஒரே தெரு, இரு பிரிவுகளாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
பாகம், 89 பிரிவு எண் 1ல், 'கருவம்பாளையம் பள்ளி வீதி' எனவும், பிரிவு எண், 4ல், 'ஆரம்பப்பள்ளி வீதி' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது; ஆனால், இரண்டும் ஒரே வீதி தான். இரு பிரிவுகளிலும், 382 வாக்காளர்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது; ஆனால், 101 வாக்காளர்களே உள்ளனர். பாகம் எண்: 105, பிரிவு எண்: 3ல், 'பாலாஜி நகர் முதல் வீதி, வார்டு எண். 52' என பதிவு செய்யப்பட்டுள்ளது.
அங்குள்ள வாக்காளர்களின் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அட்டையில், 'கே.வி.ஆர்., நகர் கிழக்கு வீதி, வார்டு எண். 42' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தெருவின் பெயரே வாக்காளர் பட்டியலில் மாற்றப்பட்டிருக்கிறது. சக்தி அபார்ட்மென்டில் வசிப்பவர்கள், 7 வார்டுகளில் பிரிக்கப்பட்டுள்ளனர். இப்படி ஒரு சிறிய வார்டுக்குள்ளேயே ஏகப்பட்ட குழப்பம், குளறுபடிகளை தாங்கிய படி தான் வாக்காளர் பட்டியல் 'அப்டேட்' செய்யப்பட்டிருக்கிறது.
-----
- நமது நிருபர் -