/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அறிவுச் செல்வத்தை அள்ளிச்செல்ல திரண்ட மாணவச் செல்வங்கள்
/
அறிவுச் செல்வத்தை அள்ளிச்செல்ல திரண்ட மாணவச் செல்வங்கள்
அறிவுச் செல்வத்தை அள்ளிச்செல்ல திரண்ட மாணவச் செல்வங்கள்
அறிவுச் செல்வத்தை அள்ளிச்செல்ல திரண்ட மாணவச் செல்வங்கள்
ADDED : பிப் 01, 2025 12:25 AM

திருப்பூர்; திருப்பூர் புத்தக திருவிழா, வேலன் ஓட்டல் மைதானத்தில் நடந்து வருகிறது. நாளையுடன் நிறைவு பெறுகிறது.
மொத்தம், 140 அரங்குகளில், 60க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் தங்கள் பிரசுரங்களை காட்சிப்படுத்திஉள்ளனர்.
குவிந்து கிடக்கும் புத்தகங்களை புரட்டி பார்ப்பதிலும், வாசிப்பதிலும் பொது மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் ஆர்வம் காட்டுகின்றனர்.
மாலையில் நடக்கும் கருத்தரங்கு மற்றும் கலை நிகழ்ச்சியை பார்ப்பதிலும் மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது.
குறிப்பாக கடந்த சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில், அதிகளவிலான கூட்டம் குவிவதால், அரங்கம் அமைத்திருப்போர் மத்தியில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது.
இன்றும், நாளையும் புத்தக திருவிழாவில், திரளானோர் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
'தினமலர்' அரங்கில் மாணவர்கள் கூட்டம்
மாணவர்கள் மத்தியில் காமிக்ஸ் உட்பட சிறுகதை புத்தகங்கள் அதிகம் ஈர்க்கின்றன. புத்தக கண்காட்சியில், 'தினமலர்' நாளிதழின் தாமரை பிரதர்ஸ் மீடியா பதிப்பகம் அரங்கம் (அரங்கு எண்.16) அமைத்துள்ளது.
ஆன்மிகம் முதல் அரசியல் வரையும்; வரலாற்று ஆராய்ச்சி முதல் பொருளாதாரம் வரையிலான கல்வி புத்தகங்கள், ஏராளமான புனைகதை படைப்புகள் மற்றும் கட்டுரை தொகுப்புகள் அடங்கிய புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன. மற்றும் வாசகர்களின் பெரும் ஆதரவை பெற்ற அந்துமணி பதில்கள் புத்தகம், மக்களின் ஆதரவை பெற்றிருக்கிறது.
புத்தக திருவிழாவில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் இந்த அரங்கில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை ஆர்வ முடன் பார்த்து செல் கின்றனர்.
பொது மக்கள் பலரும் புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர்.