/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாட்டை சுழல்கிறது! கமிஷனர் அதிரடி உத்தரவு; காவலர்கள் திடீர் சுறுசுறுப்பு
/
சாட்டை சுழல்கிறது! கமிஷனர் அதிரடி உத்தரவு; காவலர்கள் திடீர் சுறுசுறுப்பு
சாட்டை சுழல்கிறது! கமிஷனர் அதிரடி உத்தரவு; காவலர்கள் திடீர் சுறுசுறுப்பு
சாட்டை சுழல்கிறது! கமிஷனர் அதிரடி உத்தரவு; காவலர்கள் திடீர் சுறுசுறுப்பு
ADDED : ஆக 08, 2024 12:47 AM

திருப்பூர் : திருப்பூர் புதிய போலீஸ் கமிஷனர் லட்சுமி, சாட்டையை சுழற்றத் துவங்கியிருக்கிறார். அவரது அதிரடி உத்தரவுகளால், வாகன தணிக்கை, பள்ளி, வழிபாட்டு தலங்கள், பிரதான ரோடுகளில் கண்காணிப்பு என, நகரம் முழுவதும் போலீசார் திடீர் சுறுசுறுப்புடன் பணியாற்றத் துவங்கியிருக்கின்றனர்.
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டின் கீழ், ஐந்து உதவி கமிஷனர் அலுவலகங்கள், எட்டு போலீஸ் ஸ்டேஷன், இரு மகளிர் மற்றும் போக்குவரத்து ஸ்டேஷன்கள், இரு பஸ் ஸ்டாண்ட்களில் புறக்காவல் நிலையங்கள் உள்ளன.
திருப்பூரில் முக்கிய பிரச்னை போக்குவரத்து நெருக்கடி தான். புதிய ரோடு போடும் பணி, குழாய்கள் அமைக்கும் பணி, பாலம் கட்டுமான பணி போன்றவற்றால் திரும்பிய பக்கமெல்லாம் வாகன நெரிசல் 'பீக் ஹவர்ஸ்'ல் ஏற்படுகிறது.
போலீசார் பற்றாக்குறையால் பிரதான சாலைகளில் கூட போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணி பெயரளவுக்கு மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. பி.என்., ரோடு உள்ளிட்ட சில இடங்களில் ஒரு வழிப்பாதையில் வாகன ஓட்டிகள் விதிமீறல்களில் ஈடுபடுவது போன்றவற்றை நடப்பதால் விபத்து அபாயம் உள்ளது.
'பறக்கும்' உத்தரவு 'தெறிக்கும்' போலீஸ்
புதிதாக பொறுப்பேற்றுள்ள போலீஸ் கமிஷனர் லட்சுமி, மாநகரின் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை துணை கமிஷனர் உள்ளிட்டோரிடம் கேட்டு தெரிந்து கொண்டார். எக்காரணத்தை கொண்டு குற்றங்கள் நிகழாமல் தடுப்பதே போலீசாரின் முக்கிய பணி என்பதால், போலீசார் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
குற்றத்தடுப்பு, ரவுடிகள் கைது நடவடிக்கை ஆகியவற்றுக்காக, மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கமிஷனர் உத்தரவு காரணமாக, துணை கமிஷனர்கள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காலை, மாலை என, இரு நேரங்களில் நேரடியாக களத்தில் இறங்கி ரோந்து மேற்கொண்டு கமிஷனருக்கு தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.