/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காற்றாலை வெடித்து தீப்பிடித்தது 400 அடி தூரம் பறந்த பாகங்கள்
/
காற்றாலை வெடித்து தீப்பிடித்தது 400 அடி தூரம் பறந்த பாகங்கள்
காற்றாலை வெடித்து தீப்பிடித்தது 400 அடி தூரம் பறந்த பாகங்கள்
காற்றாலை வெடித்து தீப்பிடித்தது 400 அடி தூரம் பறந்த பாகங்கள்
ADDED : மார் 18, 2024 03:09 AM
தாராபுரம்: தாராபுரம் அருகே பலத்த சத்தத்துடன், காற்றாலை இயந்திரம் வெடித்து சிதறியது.
தாராபுரத்தை அடுத்துள்ள பெரியபுத்துாரில் சக்திவேல் என்பவரின் கோழிப்பண்ணை உள்ளது. இதன் அருகில் தனியார் காற்றாலை நிறுவனத்தின் காற்றாலை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை, பண்ணை அருகே அமைக்கப்பட்டிருந்த ஒரு காற்றாலை இயந்திரம் வெடித்து தீப்பிடித்தது. சத்தம் வெகு தொலைவுக்கு கேட்டதால், அதிர்ச்சி அடைந்த மக்கள் அப்பகுதியில் திரண்டனர்.
காற்றாலையில் பொருத்தப்பட்டிருந்த சிலிண்டர் வெடித்து, 400 அடி துாரம் பறந்து சென்று பாகங்கள் விழுந்தன. விபத்தில், 10க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் கருகின. தாராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் செல்வதற்கு முன்பே, பெருமளவு தீயை அப்பகுதி மக்கள் அணைத்திருந்தனர். மக்களுடன் சேர்ந்து மீதி தீயை அணைத்தனர்.