/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீர்வு காணாததால் தீக்குளிக்க வந்த பெண்
/
தீர்வு காணாததால் தீக்குளிக்க வந்த பெண்
ADDED : மார் 12, 2024 04:17 AM
ஈரோடு: ஈரோடு அருகேயுள்ள எலவமலை, மூலப்பாளையம் தெற்கு தோட்டத்தை சேர்ந்த குழந்தைவேல் மனைவி சரோஜா, 60; ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு, மனு கொடுக்க நேற்று வந்தார்.
அலுவலக நுழைவு வாயிலில் போலீசார் சோதனையிட்டபோது, அவரது பையில் மண்ணெண்ணெய் கேன் இருந்தது. அதை பறிமுதல் செய்து விசாரித்தனர்.
அப்போது சரோஜா கூறியதாவது: எனது தந்தைக்கு சொந்தமான நிலம், வீடு உள்ளது. அதில் ஒரு பகுதி நிலம் தொடர்பாக பிரச்னை எழுந்து, நீதிமன்றம் சென்று, எனக்கு சாதகமாக தீர்ப்பானது. அவ்விடத்தில் சிலர் வீடு கட்ட முயல்வது பற்றி, சித்தோடு போலீஸ், எஸ்.பி., அலுவலகத்திலும் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. எங்கள் பகுதிக்கு கலெக்டர் வந்தபோதும் மனு வழங்கினேன். ஆனால், மற்றொரு தரப்பினர், அவ்விடத்தில் வீடு கட்டிக்கொண்டே உள்ளனர். அதை தடுத்து நிறுத்தக்கோரி மனு வழங்கியும் பலனில்லை.
இதனால் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முடிவு செய்து மண்ணெண்ணெயுடன் வந்தேன். இவ்வாறு கூறினார். அவரை சமாதானம் செய்த போலீசார், கலெக்டரிடம் அழைத்து சென்று, மனு கொடுக்க செய்தனர். உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டார்.

