/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மரங்களுக்கு வர்ணம் பூசும் பணி தீவிரம்
/
மரங்களுக்கு வர்ணம் பூசும் பணி தீவிரம்
ADDED : மார் 17, 2025 12:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பில், ரோட்டோர மரங்களுக்கு வர்ணம் பூசும் பணிகள் நடக்கிறது.
மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட பராமரிப்பில், தளி-குமரலிங்கம் ரோடு உள்ளிட்ட ரோடுகள் உள்ளன. இந்த ரோடுகளில், நெடுஞ்சாலைத்துறைக்குச்சொந்தமான இடத்தில், ஆயிரக்கணக்கான மரங்கள் உள்ளன.
இந்த மரங்களை பராமரிக்கும் வகையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், வர்ணம் பூசும் பணிகள் நடக்கிறது.
விரைவில், மாநில நெடுஞ்சாலை மற்றும் இதர ரோடுகளிலுள்ள, மரங்களுக்கும் வர்ணம் பூசும் பணிகள் நடைபெறும் என, நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.