/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிழற்கூரை அமைக்கும் பணி துவங்கியதும் நிறுத்தம்
/
நிழற்கூரை அமைக்கும் பணி துவங்கியதும் நிறுத்தம்
ADDED : மார் 07, 2024 04:16 AM

திருப்பூர் : சடையப்பன் கோவில் முன்புறம் நிழற்கூரை அமைக்கும் பணி துவக்க நிலையிலேயே நிற்பதால் அவதி ஏற்படுகிறது.
திருப்பூர், வாலிபாளையம் சடையப்பன் கோவில் முன்புறம் பக்தர்கள் வசதிக்காக நிழற்கூரை அமைக்கும் பணி துவங்கியது. தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியில் இப்பணிக்கு கடந்த வாரம் பூமி பூஜை நடத்தி பணி துவங்கியது.அதன்பின் அந்த ரோட்டில் போக்குவரத்தை மறித்து நிழற்கூரைக்கு துாண்கள் அமைக்க குழி தோண்டப்பட்டது.
குழி தோண்டி பல நாட்களாகியும் அதற்கு மேல் பணி நிறுத்தப்பட்டது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் அவதி ஏற்பட்டுள்ளது. நிழற்கூரை அமைக்கும் பணியை விரைந்து மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும்.

