/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பணிமனை முன்பே பரிதாபம் சாலை சேதத்தால் தடுமாற்றம்
/
பணிமனை முன்பே பரிதாபம் சாலை சேதத்தால் தடுமாற்றம்
பணிமனை முன்பே பரிதாபம் சாலை சேதத்தால் தடுமாற்றம்
பணிமனை முன்பே பரிதாபம் சாலை சேதத்தால் தடுமாற்றம்
ADDED : டிச 15, 2025 05:08 AM

திருப்பூர்: அரசு போக்குவரத்து கழக, திருப்பூர் மண்டல அலுவலகம் மற்றும் இரண்டு பணிமனைகள், காங்கயம் ரோட்டில் செயல்படுகின்றன.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு, பிற மாவட்டங்களுக்கு இங்கிருந்து தினமும், 164 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பத்து நிமிடத்துக்கு ஒரு பஸ் கடந்து செல்லும் பணிமனை நுழைவுவாயிலிலேயே சாலை சேதமாகியுள்ளது.
பஸ்களை சுத்தம் செய்யும் இடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரும், மழை பெய்தால் டிப்போ தரைத்தளம் முழுதும் இருந்து செல்லும் மழைநீரும் பணிமனை முன்பகுதியில் வந்து தேங்கி விடுகிறது. கழிவுநீர் வழிந்தோட வழியில்லாத நிலையில், அதில் தொடர்ந்து பஸ்கள் பயணிப்பதால், அந்த இடமே குழியாகி விட்டது.
''கழிவுநீர், மழைநீர் வெளியேற மாற்று வழி ஏற்படுத்துவதுடன், குழியை மூடி, நுழைவுவாயில் முன்புற சாலையை சீரமைக்க வேண்டும்'' என்கின்றனர் அரசு பஸ் டிரைவர்கள்.

