/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்:தை பிறந்தது... வழி பிறக்குமா?எதிர்பார்ப்பில் தென்னை விவசாயிகள்
/
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்:தை பிறந்தது... வழி பிறக்குமா?எதிர்பார்ப்பில் தென்னை விவசாயிகள்
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்:தை பிறந்தது... வழி பிறக்குமா?எதிர்பார்ப்பில் தென்னை விவசாயிகள்
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்:தை பிறந்தது... வழி பிறக்குமா?எதிர்பார்ப்பில் தென்னை விவசாயிகள்
ADDED : ஜன 16, 2024 02:32 AM
மாநிலத்தில், லட்சக்கணக்கான தென்னை விவசாயிகள் உள்ளனர். தேங்காய், கொப்பரை உள் ளிட்ட தேங்காய் மற்றும் அதுசார்ந்த தொழிலில் வருமானம் ஈட்டுகின்றனர். கடந்த ஓரிரு ஆண்டுகளாக, தேங்காய்க்கு உரிய விலையின்றி, விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
'ஒரு தேங்காய்க்கு, 10 முதல், 12 ரூபாய் வரை மட்டுமே விலை கிடைப்பதால், தோட்ட பராமரிப்பு செய்யக்கூட நிதியின்றி தவிக்கிறோம்' என, விவசாயிகள் கூறி வருகின்றனர். தேங்காய்க்கு உரிய விலை வழங்கக்கோரி, பல்வேறு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுதான் காரணமா?
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க அறிக்கை;
கடந்த, 2019ல் ஒரு தேங்காய்க்கு, 20 ரூபாய் விலை கிடைத்தது; அச்சமயத்தில், பாமாயில் மீதான இறக்குமதி வரி, 44 சதவீதம். தற்போது, (2024) தேங்காய்க்கு, 10 ரூபாய் மட்டுமே விலை கிடைக்கிறது. தற்போது பாமாயில் மீதான இறக்குமதி வரி, 32 சதவீதமாக இருக்கிறது.
இறக்குமதி வரி, 12 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டதன் வாயிலாக, தேங்காய் எண்ணெயை விட பாமாயில், லிட்டருக்கு, 40 ரூபாய் வரை குறைவாக கிடைக்கிறது. எனவே, சோப்பு உள்ளிட்ட பொருட்கள் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள், அதிகளவில் பாமாயில் பயன்படுத்த துவங்கிவிட்டனர். இதனால் தான், தேங்காய் எண்ணெய்க்கு சந்தை இல்லாமல் போனது; உரிய விலையும் கிடைப்பதில்லை. விளைவாக, நம் நாட்டில் உள்ள, 1.10 கோடி தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரேஷனில் விற்கலாம்...
'தேங்காய்க்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்து, கடந்த, ஆக., மாதம், மாவட்டம் முழுவதும், தேங்காய் உடைப்பு போராட்டம் நடத்தினோம். கோவை, ஈரோடு, கரூர் மாவட்டங்களிலும், போராட்டம் நடத்தப்பட்டது.
பாமாயிலுக்கான இறக்குமதி வரி குறைப்பு தேங்காய் விலை வீழ்ச்சிக்கு காரணம்; இதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அதே நேரம், மாநில அரசு, தேங்காயை கொள்முதல் செய்து, தேங்காய் எண்ணெய் தயாரித்து ரேஷன் கடைகள் வாயிலாக விற்பனை செய்தால், தென்னை விவசாயம் செழிக்கும்; தேங்காய்க்கும் கூடுதல் விலை கிடைக்கும்.
- ஈஸ்வரன், திருப்பூர் மாவட்ட தலைவர்,
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்.
கலப்படம் வேண்டாமே?
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு இறக்குமதி வரி குறைப்பு, மானியம் வழங்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் உற்பத்தியாகம் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், எள் எண்ணெய்க்கு எந்த சலுகை, மானிய மும் இல்லை. நம் ஊரில் தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெயில் ஒயிட் ஆயில் எனப்படும் ஒரு வகை எண்ணெய் கலப்படம் செய்யப்படுகிறது.
தேங்காய் எண்ணெயை அதிகம் பயன்படுத்துவது உடல் நலத்துக்கு கேடு என, சில மருத்துவர்கள் தவறான பிரசாரம் செய்கின்றனர். அடுத்து, கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் தான் தேங்காய் விலை வீழ்ச்சிக்கு காரணமாகிவிட்டது.
- நல்லசாமி, செயலாளர்,
தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு.