/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குதுாகலம் நிறைந்த ' குட்டீஸ் உலகம் '
/
குதுாகலம் நிறைந்த ' குட்டீஸ் உலகம் '
ADDED : நவ 11, 2024 04:24 AM

ஒவ்வொரு குழந்தைகளிடமும் ஓராயிரம் கனவுகள்; பெரியவர்களானதும், இந்தக் கனவுகள் ஒரு மாயாஜாலம் போலத் தோன்றலாம். யதார்த்தமாகவும் மாறலாம். சிறுவர் - சிறுமியரின் கனவுகளை மறைக்கவோ, புதைக்கவோ, அடக்கவோ யாருக்கும் அனுமதி இல்லை. சின்னதோ, பெரிதோ அவர்களது ஆசைகளும், கனவுகளும், பெரியவர்களுக்குக் கூட உற்சாகத்தை வர வழைக்கும்; இதோ, நம்மிடம் சிலர் பகிர்ந்த கனவுகள்:
எல்லாரையும் 'பீட்' பண்ணனும்
தியா, சாமுண்டிபுரம்: எனக்கு பரத நாட்டியம்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும். என்னோட இன்ட்ரஸ்ட்டை பார்த்து பேரன்ட்ஸ் என்னை டான்ஸ் கிளாஸ்ல சேர்த்து விட்டாங்க. நல்லா பிராக்டீஸ் பண்ணி, பெரிய மேடையில அரங்கேற்றம் நடத்தணும்னு ஆசையா இருக்கு. அதற்கு நீங்கெல்லாம் கண்டிப்பாக வரணும்.
எனக்கு க்விஸ்னா ரொம்ப இஷ்டம். வீட்டில் எல்லாரும் ஒன்னா உக்காந்து லீவு நாள்ல வெளாடுவோம். எல்லாரையும் 'பீட்' பண்ணனும்னு ஆசை இருக்கு. பல நேரங்களில் நான் தான் அதிகம் ஸ்கோர் செய்வேன்.
மலைவாழ் மக்கள் எல்லாம் நல்ல மருத்துவ வசதியில்லாமல் சிரமப்படறாங்கன்னு பேப்பர்ல நியூஸ் எல்லாம் வருது. நான் நல்லா படிச்சு டாக்டர் ஆகணும், இது போல் சிரமப்படும் மக்களுக்கு வைத்தியம் பார்க்கணும்.
தப்பு செய்றவங்க ஓடிப் போய்டுங்க
சஞ்சய், இ.பி., காலனி காந்தி நகர்: எனக்கு கிரிக்கெட் விளையாடறது ரொம்ப பிடிக்கும். என் பிரண்ட்ஸோட சேர்ந்து டைம் கெடைக்கறப்பல்லாம் வெளாடுவேன். உடம்பை எப்பவும் பிட்னஸா வச்சிருக்கணும்னு அப்பா சொல்வாரு. அதனால் நான் கிரிக்கெட் விளையாடறதை வீட்டில் யாரும் தடுக்க மாட்டாங்க.
போலீஸ் வேலைக்கு போகனும் என்றால் உடம்பு நல்லா 'பிட்'டாக இருக்கணும்ல. எனக்கு பெரிய போலீஸ் ஆபீசரா ஆகணும்... ஊருக்கு நல்லது செய்யணும்னு ஆசையிருக்கு. படிப்பும் சரி; வெளையாட்டும் சரி; ஈக்குவலா தான் பார்க்கறேன். நீங்களும் பார்த்துட்டே இருங்க... நானும் ஒரு நாள் பெரிய போலீஸ் ஆபீசராகப் போறேன். தப்பு பண்றவங்க எல்லாம் தயவு செஞ்சு ஓடிப் போயிடுங்க.
டீச்சர் மாதிரி இங்கிலீஷ் பேசணும்
நித்திகாஸ்ரீ, கே.வி.ஆர்., நகர்: எங்க டீச்சரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவங்க இங்கிலீஷ் நல்லா பேசுறாங்க; அவங்கள மாதிரி இங்கிலீஷ் பேசணும்னு ஆசை. அதனால, நானும் டீச்சராகணும். நிறைய படிச்சு பெரிய டீச்சராக வேண்டியதில்லை. கொஞ்சமாக படிச்சு, எல்.கே.ஜி., யு.கே.ஜி.,க்கு டீச்சராகி விட்டால் போதும்.
டாக்டர் ஆயிட்டா ஊசி போடலாம்ல...
ஷிவவர்ஷினி, மாஸ்கோ நகர்: டாக்டராகணும்; டாக்டர் தானே காய்ச்சல் வந்தால் நமக்கு ஊசி போடுறாங்க. அப்பத்தான் காய்ச்சல் சரியாகுது. அதனால, டாக்டர் ஆயிட்டா நாம எல்லாருக்கும் ஊசி போடலாம்ல. வீட்டில் இருக்கிறவுங்களுக்குக் காய்ச்சல் வந்துட்டா, நாமளே வீட்டுல ஊசி போட்டுக்கலாம். மருந்து வாங்கி வெச்சிக்கலாம்ல.
ஐ.டி., கம்பெனிலதான் சேருவேன்
விகாஷினி, பூலுவபட்டி: எங்க மாமா ஐ.டி., கம்பெனில இருக்காரு; அவரு, 'லேப்-டாப்' வச்சிருக்காரு; நானும் ஐ.டி., கம்பெனிலதான் சேருவேன். இப்ப, நல்லாதான் படிச்சுட்டு இருக்கேன். எங்க அம்மா டீச்சர்ங்கறதால, என்னை 'படி'னு சொல்லிட்டே இருப்பாங்க. கொஞ்ச நாள் ஐ.டி., கம்பெனி வேலை பார்த்துட்டு, 'பேஷன் டிசைனிங்' ஜாப்க்கு மாறிடுவேன்.
நிச்சயமா கலெக்டராகப் போறேன்
வருஷ்ணி, எம்.எஸ்., நகர்: எங்க கிளாஸ்ல நான் தான் பர்ஸ்ட் மார்க் எடுக்கறேன்... டீச்சர் என்னை பாராட்டுவாங்க. தினமும் டியூஷன் போயிட்டுத்தான் இருக்கேன். கலெக்டர் ஆகறதுதான் என்னோட ஆம்பிஷன். கலெக்டர் தான் மிகப்பெரிசு; நானும் எதிர்காலத்துல கலெக்டர் ஆவேன்; சொன்னா, எல்லோரும் சிரிக்கறாங்க, அதைப்பத்தி எனக்கு கவலையில்லை; நான் நிச்சயமா கலெக்டர் ஆவேன்.
ஐ.பி.எஸ்., ஆகி தப்பத் தட்டிக் கேட்பேன்
வசுந்தரா ராமகிருஷ்ணன், குமரன் ரோடு, திருப்பூர்: எனக்கு போலீஸ் ஐ.பி.எஸ்., ஆபீசராகணும்னு ஆசை. போலீசை ரொம்பப் பிடிக்கும். போலீஸ்காரர் முத்துக்குமார் மாமாவை பார்த்து தான், ஐ.பி.எஸ்., ஆகணும்னு ஆசை வந்துச்சு. நான் அதிகாரியாக மாறணும்; அப்புறம் ஊருக்கு நல்லது செய்யணும். தப்ப தட்டி கேட்கணும். மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கணும்னு ஆசை.
குட்டீஸூக்கு டாக்டராகப் போறேன்
நிலா, நாச்சிபாளையம்: எனக்கு டாக்டரா ஆகணும்; நல்லா படிச்சு பெரிய புள்ளையா ஆன பின்னாடி வெறும் டாக்டர் மட்டும் இல்லாம, குழந்தைகள் டாக்டராகவும் ஆகணும். அப்பாவோட பிரண்ட் மாமா ஒருத்தரு இருக்காரு. அவரை பார்த்து தான் ஆசை வந்துச்சு. டாக்டராகி மக்களுக்கு உதவி செய்வேன். ஊசி போடுவேன். மருந்து கொடுப்பேன்.
- நவ., 14, குழந்தைகள் தினம்.