/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரசிகர்களால் களைகட்டிய தியேட்டர்கள்
/
ரசிகர்களால் களைகட்டிய தியேட்டர்கள்
ADDED : நவ 01, 2024 12:44 AM

திருப்பூர் : தீபாவளி பண்டிகைக்கு தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட திரைப்படங்களை ரசிகர்கள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர்.
பொதுவாக, தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்படுவது வழக்கம்: இந்தாண்டு ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்டோரின் படங்கள் எதுவும் ரிலீஸ் செய்யப்படவில்லை.
நேற்று சிவகார்த்திகேயன் நடிப்பில் 'அமரன்', ஜெயம் ரவி நடிப்பில் 'பிரதர்', கவின் நடிப்பில் 'பிளடி பெக்கர்' சினிமா ரிலீஸ் செய்யப்பட்டது. இதில், 'அமரன்' படத்துக்கு, ரசிகர்களின் ஆதரவை கூடுதலாக பார்க்க முடிந்தது.
திருப்பூர் தெற்கு மாவட்ட தலைமை சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பில், அதன் தலைவர் அசோக்குமார், செயலாளர் ராஜா, பொருளாளர் ஷ்யாம் சுந்தர் உள்ளிட்டோர் முன்னிலையில், திருப்பூர், உஷா தியேட்டர் வளாகத்தில் கேக் வெட்டி, அனைவருக்கும் வழங்கப்பட்டது.
செயலாளர் ராஜா கூறுகையில்,'' அமரன் படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடிக்கும் நிலையில், நான்கு சிறுவர்களுக்கு ராணுவ வீரர் உடையணிந்து, தேசப்பற்று உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம்,'' என்றார்.
அதே போன்று, மற்ற படங்களையும் ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.