/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாகதேவி கோவிலுக்கு தீர்த்தக்குட ஊர்வலம்
/
நாகதேவி கோவிலுக்கு தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED : ஆக 02, 2025 11:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி:அவிநாசி, கைகாட்டிப்புதுார், சந்தைக்கடை வளாகத்தில் உள்ள ஸ்ரீ நாகதேவி புற்றுக்கோவிலில், 38ம் ஆண்டு தீர்த்த குட பாலாபிஷேகம் மற்றும் பூக்கரகம் எடுத்து ஊர்வலமாக செல்லும் விழா நடைபெற்றது.
அப்பகுதியை சேர்ந்த பெண்கள், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலிலிருந்து பால்குடம் மற்றும் பூக்கரகம் எடுத்து, பம்பை மேளம் முழங்க, மெயின் ரோடு, கைகாட்டிப்புதுார் வழியாக கோவிலுக்கு சென்று அம்மனுக்கு அபிேஷகம் செய்தனர்.
சிறப்பு அலங்காரத்தில், அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக, காப்புக் கட்டுதல், படைக்கலம், திருக்கல்யாணம், கிடா வெட்டுதல், பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.