நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார், ; பொங்கலுார், மூகாம்பிகை நகரில் காலபைரவர் கோவில் உள்ளது. அங்கு வேலுசாமி என்பவர் அர்ச்சகராக உள்ளார்.
நேற்று முன்தினம் இரவு கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். காலையில் சென்று பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த இரண்டு கை மணி, நான்கு பித்தளை குத்துவிளக்கு மற்றும் உண்டியல் பணம் காணாமல் போனது தெரியவந்தது. அவிநாசி பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

