/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி - அத்திக்கடவு திட்டம் செயல்பாட்டில் குறைகள் ஏராளம்
/
அவிநாசி - அத்திக்கடவு திட்டம் செயல்பாட்டில் குறைகள் ஏராளம்
அவிநாசி - அத்திக்கடவு திட்டம் செயல்பாட்டில் குறைகள் ஏராளம்
அவிநாசி - அத்திக்கடவு திட்டம் செயல்பாட்டில் குறைகள் ஏராளம்
ADDED : டிச 16, 2024 10:39 PM
திருப்பூர்; அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்ட செயல்பாடுகளில் ஏராளமான குறைபாடுகள் உள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை மையமாக வைத்து, 1,914 கோடி ரூபாய் செலவில் அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணி நிறைவுற்றது. திட்டத்தின் கீழ் குளம், குட்டைகளுக்கு நீர்செறிவூட்டும் பணியும் நடந்து வருகிறது.
திட்டத்தில் உள்ள குறைபாடுகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக் குழுவினர் மற்றும் பல்வேறு விவசாய சங்கத்தினர் குறைகளை பட்டியலிட்டு வருகின்றனர்.
என்னென்ன குறைகள்?
* சாலையோரம் பதிக்கப்பட்ட குழாய்கள் வெளியே தெரியாததால், ஊராட்சி நிர்வாகத்தினர், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பிற துறையினர் வாயிலாக சாலை தோண்டப்படும் போது, அத்திக்கடவுக் குழாய் தவறுதலாக உடைகிறது. இதைத் தவிர்க்க, குழாய் செல்லும் நிலத்தில் ஒவ்வொரு அரை கி.மீ.,க்கும் ஒரு அடையாளக் கற்கள் நடப்பட வேண்டும்.
* நீர் செறிவூட்டப்படும் குளம், குட்டைகளில், 'அவுட்லெட் மேனேஜ்மென்ட் சிஸ்டம்' பொருத்தப்பட்டுள்ள இடத்தை சுற்றி வேலி அமைக்க வேண்டும்.
* அத்திக்கடவு - அவிநாசி திட்ட கண்காணிப்பு கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டும். அதில், அந்தந்த உள்ளாட்சி தலைவர்கள், அத்திக்கடவு ஆர்வலர்கள், விவசாயிகள் மற்றும் பொது மக்களை உறுப்பினராக்க வேண்டும்.* கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட கலெக்டர்கள், குறிப்பிட்ட இடைவெளியில் திட்டம் செயலாக்கம் தொடர்பான கூட்டம் நடத்த வேண்டும்.
* திட்டம் குறித்து பல்வேறு விவசாய அமைப்பினர் கூறும் குறைகளை கேட்டறிந்து, அதற்கான தீர்வு ஏற்படுத்த, அரசின் சார்பில் பிரத்யேக குழு அமைக்க வேண்டும்.
இத்தகைய குறைபாடுகள் மற்றும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.