sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குப்பை தொட்டி வைக்கவில்லை... மழைநீர் வெளியேற வழியில்லை

/

குப்பை தொட்டி வைக்கவில்லை... மழைநீர் வெளியேற வழியில்லை

குப்பை தொட்டி வைக்கவில்லை... மழைநீர் வெளியேற வழியில்லை

குப்பை தொட்டி வைக்கவில்லை... மழைநீர் வெளியேற வழியில்லை


ADDED : ஏப் 09, 2025 07:04 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 07:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாலைப்பணி எப்போது?

அவிநாசி, பை-பாஸ் சாலை, சாய்பாபா காலனியில் ரோடு போட ஜல்லி கொட்டி ஒரு மாதமாகிறது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் நடந்து செல்ல முடியாமல் தடுமாறுகின்றனர். உடனே ரோடு போட வேண்டும்.

- மணி, சாய்பாபா காலனி. (படம் உண்டு)

காத்திருக்கும் ஆபத்து

திருப்பூர், 15 வேலம்பாளையம், மகாலட்சுமி நகர் விரிவு பகுதியில், சுகாதார நிலையம் எதிரில், தரைப்பாலத்தின் கம்பிகள் ஆபத்தான நிலையில் நீட்டியபடி உள்ளது.

- முபாரக் பாட்ஷா, மகாலட்சுமி நகர் விரிவு. (படம் உண்டு)

மழைநீர் தேக்கம்

திருப்பூர், காந்தி நகர், அன்னபூர்ணா நகர், ஜே.எஸ்., கார்டன் செல்லும் வழியில் மழை பெய்து போதெல்லாம், மழைநீர் வழிந்தோட வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கோகுலகிருஷ்ணன், அன்னபூர்ணா நகர். (படம் உண்டு)

திருப்பூர், பள்ளக்காட்டுப்புதுார் பிரிவு, சோளியம்மன் கோவில், அமர்ஜோதி கார்டன் விரிவு பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் வெளியேற வழியில்லை.

- குட்டி, பள்ளக்காட்டுப்புதுார். (படம் உண்டு)

திருப்பூர் மாநகராட்சி, 19வது வார்டு, எஸ்.எஸ்., நகர் மாநகராட்சி துவக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்துக்குள் மழை பெய்தால், மழைநீர் புகுந்து விடுகிறது. சேதம் ஏற்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் கவனித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ரஞ்சித், எஸ்.எஸ்., நகர். (படம் உண்டு)

கழிவுநீரால் அவதி

செங்குந்தபுரம் இரண்டாவது வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வழிந்தோடி துர்நாற்றம் வீசுகிறது. கால்வாய் அடைப்புகளை சீர்செய்ய வேண்டும்.

- கதிர், செங்குந்தபுரம். (படம் உண்டு)குப்பை தொட்டி வைங்க

பல்லடம், கரைப்புதுார் ஊராட்சி, மீனம்பாறை பகுதியில் குப்பை தொட்டி வைக்க வேண்டும். குப்பைகள் ரோட்டில் தேங்குவதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

- செல்வராஜ், மீனம்பாறை. (படம் உண்டு)

ரியாக் ஷன்

புதிய மின் கம்பம்

வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளதாக 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. மின்வாரியம் மூலம் புதிய மின்கம்பம் மாற்றப்பட்டுள்ளது.

- செல்வராஜ், வீரபாண்டி. (படம் உண்டு)






      Dinamalar
      Follow us