/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தேசிய நெடுஞ்சாலையில் உயிருக்கு உத்தரவாதம் இல்லை'
/
'தேசிய நெடுஞ்சாலையில் உயிருக்கு உத்தரவாதம் இல்லை'
'தேசிய நெடுஞ்சாலையில் உயிருக்கு உத்தரவாதம் இல்லை'
'தேசிய நெடுஞ்சாலையில் உயிருக்கு உத்தரவாதம் இல்லை'
ADDED : மே 17, 2025 02:38 AM

பல்லடம் : பல்லடத்தை அடுத்த, சுக்கம்பாளையம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். முன்னதாக, நீர் பாசனம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்ட விவசாயிகள், தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் உயிரிழப்பு குறித்தும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் கூறியதாவது: நம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை நாமே பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. வாகனங்கள் அசுர வேகத்தில் செல்ல நெடுஞ்சாலை துறையே அனுமதி வழங்கி உள்ளபோது, உள்ளூரில் உள்ள நாம் அச்சத்துடன் நெடுஞ்சாலையை கடக்க வேண்டி உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைக்கு சென்றால், வீடு திரும்பவது உறுதி கிடையாது. அதிகாரிகள் சிந்தித்து தான் செயல்படுகின்றனரா என்று தெரியவில்லை. அருகிலுள்ள கேரள மாநில மக்கள், எந்த ஒரு பிரச்னைக்காகவும் ஒன்று சேர்கின்றனர். ஆனால், இங்கு ஒரு பிரச்னை என்றால் யாரும் முன் வருவதில்லை. வாகனங்கள் அசுர வேகத்தில் செல்வதானால், அதற்கு இந்தப் பாதையை நெடுஞ்சாலை துறையினர் அனுமதித்து இருக்கக் கூடாது.
கன்டெய்னர்கள், சரக்கு டிப்பர் லாரிகள், ஆம்புலன்ஸ்கள், கனரக வாகனங்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த வாகனங்களையும் இந்த ஒரே ரோட்டில் அனுமதித்துள்ளனர்.
விவசாயத்தில்தான், எப்போது நஷ்டம் வரும் என்று தெரியாமல் அச்சத்தில் உள்ள நிலையில், ரோட்டுக்கு வந்தால், உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்ற அச்சம் ஏற்படுகிறது. முந்தைய காலத்தில், எந்தவித ஆரவாரமும், அச்சமும் இன்றி, இந்த ரோட்டில் பயணித்து வந்தோம். இப்போது, எல்லை தாண்டி செல்ல வேண்டாம் என, குடும்பத்தினர் கூறுகின்றனர்.
இவ்வாறு, ஆபத்தான நிலையில் உள்ள ரோட்டில் ஏற்பட்ட விபத்துகளால், எத்தனையோ உயிரிழப்புகள் மற்றும் உடல் உறுப்புகளை இழந்தவர்கள் என, பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அரசும், அதிகாரிகளும் இதுகுறித்து கண்டுகொள்ளாமல் இருப்பது மிக மிக வேதனை அளிப்பதாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.