/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரயில்வே ஸ்டேஷனில் இருக்கை வசதி இல்லை
/
ரயில்வே ஸ்டேஷனில் இருக்கை வசதி இல்லை
ADDED : ஜூலை 29, 2025 07:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:
உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், போதிய இருக்கை இல்லாததோடு, மேற்கூரையை நீட்டிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் உள்ள உடுமலை ரயில்வே ஸ்டேஷன் வழியாக தினமும் 4 ரயில்கள் செல்கின்றன. ஏராளமான பயணியர் அங்கு வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு போதிய இருக்கைகள் இல்லை. மேலும் மேற்கூரையும் குறைந்த அளவில் உள்ளது. எனவே, அங்கு, கூடுதல் இருக்கைகளும், மேற்கூரையை ரயில் நிற்கும் பகுதி வரை நீட்டித்தும் அமைக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.