/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பகல் நேர பாதுகாப்பு மையத்துக்கு போக்குவரத்து வசதி இல்லை
/
பகல் நேர பாதுகாப்பு மையத்துக்கு போக்குவரத்து வசதி இல்லை
பகல் நேர பாதுகாப்பு மையத்துக்கு போக்குவரத்து வசதி இல்லை
பகல் நேர பாதுகாப்பு மையத்துக்கு போக்குவரத்து வசதி இல்லை
ADDED : ஆக 29, 2025 09:31 PM
உடுமலை; மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான பகல் நேர பாதுகாப்பு மையத்துக்கு, போக்குவரத்து வசதி அமைத்து தருவதற்கு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு, கல்வி அளிக்கும் நோக்கத்தில், பகல் நேர பாதுகாப்பு மையங்கள் செயல்படுத்தப்பட்டன.
கை கால் பாதிக்கப்பட்டவர்கள், ஆட்டிசம் உள்ளிட்ட குறைபாடுள்ள, பள்ளி செல்ல முடியாத குழந்தைகள் இந்த மையங்களில் பராமரிக்கப்படுகின்றனர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் சிறப்பாசிரியர்கள், மையத்துக்கு ஒருவர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உடுமலையில், போடிபட்டி மற்றும் குடிமங்கலத்தில் சோமவாரப்பட்டி ஊராட்சிகளில் இந்த மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்களுக்கு, குழந்தைகளை அழைத்து வருவதற்கு முன்பு போக்குவரத்து வசதி செய்யப்பட்டிருந்தது. தற்போது அவ்வாறு எதுவும் இல்லை.
பகல் நேர பாதுகாப்பு மையத்துக்கான போக்குவரத்து வசதியை, மீண்டும் அரசு ஏற்படுத்த வேண்டுமென குழந்தைகளின் பெற்றோரும், ஆசிரியர்களும் எதிர்பார்க்கின்றனர்.