/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தமிழில் நுாற்றுக்கு நுாறு ஒருவர் கூட இல்லை
/
தமிழில் நுாற்றுக்கு நுாறு ஒருவர் கூட இல்லை
ADDED : மே 17, 2025 01:23 AM
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு தேர்ச்சியில், பாடவாரியாக நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றவர்கள் விவரம் பின்வருமாறு:
தமிழில் மாநிலத்தில் எட்டு பேர் மட்டுமே நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றனர். திருப்பூர் மாவட்டத்தில் ஒருவர் கூட பெறவில்லை. ஆங்கிலத்தில், 40 பேரும், கணிதத்தில், 89 பேரும், அறிவியலில், 410 பேரும், சமூக அறிவியலில், 455 பேரும் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
அதிகபட்சமாக ஆங்கிலத்தில், 99.81 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; குறைந்தபட்சமாக, கணிதத்தில், 97.45 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழில்,98.91 சதவீதத்தினரும், அறிவியலில், 97.86, சமூக அறிவியல், 98.14 சதவீதத்தினரும் தேர்ச்சி பெற்றனர்.