/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வழிபாட்டு தலங்கள் சிறப்பு சட்டம் கூடாது'
/
'வழிபாட்டு தலங்கள் சிறப்பு சட்டம் கூடாது'
ADDED : டிச 13, 2024 10:52 PM
திருப்பூர்; ஹிந்து முன்னேற்றக் கழக தலைவர் கோபிநாத் அறிக்கை: தேசம் முழுவதும் வழிபாட்டு தலங்கள் 1947 ஆக., 15க்கு முன்னர் இருந்தபடியே இருக்க வேண்டும். அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என, வழிபாட்டு தலங்கள் சிறப்பு சட்டம் 1991 தெரிவிக்கிறது.
இதை எதிர்த்து சுப்ரமணியசாமி உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இதில் விசாரணை மேற்கொண்ட சுப்ரீம் கோர்ட், சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி இது போல் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் ஒன்றிணைத்து விசாரிக்க வேண்டும்; புதிதாக வழக்கு ஏதும் விசாரணைக்கு எடுக்கக்கூடாது; எந்த வழக்கிலும் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளது.
இந்த தடையை சுப்ரீம் கோர்ட் விலக்கிக் கொள்ள வேண்டும். எங்கள் அமைப்பு சார்பில் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். இந்த சிறப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

