/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீர்இன்று அமையாது உலகெனின்... அத்திக்கடவு தண்ணீர் வந்தது விவசாயிகளிடம் பூரிப்பு; 'பொங்கியது'
/
நீர்இன்று அமையாது உலகெனின்... அத்திக்கடவு தண்ணீர் வந்தது விவசாயிகளிடம் பூரிப்பு; 'பொங்கியது'
நீர்இன்று அமையாது உலகெனின்... அத்திக்கடவு தண்ணீர் வந்தது விவசாயிகளிடம் பூரிப்பு; 'பொங்கியது'
நீர்இன்று அமையாது உலகெனின்... அத்திக்கடவு தண்ணீர் வந்தது விவசாயிகளிடம் பூரிப்பு; 'பொங்கியது'
ADDED : ஜன 14, 2025 11:47 PM
திருப்பூர்; விவசாய பூமி நிறைந்த கொங்கு மண்டல மக்களுக்கு, இந்தாண்டு கூடுதல் மகிழ்ச்சி. அதற்கு முக்கிய காரணம், அறுபது ஆண்டு கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி நீர்செறிவூட்டும் திட்டம் நடைமுறைக்கு வந்திருப்பது தான்.கிட்டத்தட்ட, 24 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், 1,045 குளம், குட்டைகள் வாயிலாக, நிலத்தடி நீர் மட்டம் உயர்த்தும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட குளம், குட்டைகளில் விழும் நீரை, 'அத்திக்கடவு தீர்த்தம்' எனக் கூறி கண்களில் ஒத்திக் கொள்கின்றனர் விவசாயிகள்.'அவிநாசி, செம்மாண்டம்பாளையம் குட்டை, அத்திக்கடவு நீர் வரத்தால் முழுவதுமாக நிரம்பி வழிகிறது; வீணாகும் உபரி நீரை, அருகேயுள்ள குளம் குட்டைகளுக்கு திருப்பிவிட வேண்டும்' எனக் கூறி வருகின்றனர், அத்திக்கடவு திட்டத்தின் முழு பயனை அனுபவிக்கும் ஒரு பகுதி விவசாயிகள்.அதே நேரம், 'மங்கரசவளையபாளையம், தாளக்கரையில் உள்ள குளத்துக்கு இதுவரை அத்திக்கடவு நீர் வரவில்லை.
பொங்கல் திருநாளில் இது, பெரும் ஏமாற்றம்' என குறைபட்டு கொள்கின்றனர் அப்பகுதி விவசாயிகள்.இதுபோல், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், அத்திக்கடவு திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பல குளம், குட்டைகள் நிரம்புவதும், சில குட்டைகளுக்கு தண்ணீர் செல்லாமல் இருப்பதும், அந்தந்த பகுதி விவசாயிகள் மத்தியில் மாறுபட்ட மனநிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
'வெள்ளோட்டம் அடிப்படையில் தான் திட்டம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. குறைகள் படிப்படியாக கண்டறியப்பட்டு, நிவர்த்தி செய்யப்படும்' என நம்பிக்கை தருகின்றனர் நீர்வளத்துறையினர். 'தை பிறந்தாச்சு, வழி பிறக்கும்...' என்ற நம்பிக்கையில் காத்துள்ளனர் விவசாயிகள்.

