/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மகிழ் வனத்தில் முகிழ்ந்தனர்! திருவாரூர் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் வியப்பு
/
மகிழ் வனத்தில் முகிழ்ந்தனர்! திருவாரூர் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் வியப்பு
மகிழ் வனத்தில் முகிழ்ந்தனர்! திருவாரூர் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் வியப்பு
மகிழ் வனத்தில் முகிழ்ந்தனர்! திருவாரூர் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் வியப்பு
ADDED : ஜூலை 18, 2025 11:56 PM

பல்லடம்: பல்லடம் அருகே மகிழ்வனம் பூங்காவை பார்வையிட்ட திருவாரூர் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆச்சரியம் அடைந்தனர்.
தமிழக அரசு சார்பில், ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி அலுவலர்கள், தமிழகத்தில் உள்ள பல்வேறு ஊராட்சிகளுக்கு பட்டறிவுப் பயணம் மேற்கொள்வது வழக்கம். அவ்வகையில், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட ஊராட்சி தலைவர்கள், ஊரக வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோர், பல்லடத்தை அடுத்த, கோடங்கிபாளையம் ஊராட்சிக்கு பட்டறிவு பயணம் செய்தனர். கோடங்கிபாளையம் ஊராட்சி செயலர் கண்ணப்பன் மற்றும் முன்னாள் ஊராட்சி தலைவர் பழனிசாமி ஆகியோர் வரவேற்றனர்.
இக்குழுவுக்கு தலைமை வகித்த ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கர் கூறியதாவது:
பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அங்கு செயல்படுத்தப்படும் சிறப்பான திட்டங்கள், செயல்பாடுகளை நேரடியாக கண்டறிந்து, அவற்றை பிற ஊராட்சிகளில் செயல்படுத்துவற்காகவே பட்டறிவு பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி, திருவாரூர் மாவட்டத்திலிருந்து வரும் நாங்கள், ஐ.எஸ்.ஓ., உலக தரச்சான்று பெற்ற கோடங்கிபாளையம் ஊராட்சிக்கு வந்தது பெருமிதமாக உள்ளது.
இங்கு, ஆயிரக்கணக்கான மரங்களுடன் தாவரவியல் பூங்கா, தேனீக்கள் வளர்ப்பு, பறவைகள், நிலத்தடி நீர் சேகரிப்பு என, ஊராட்சியின் பல்வேறு செயல்பாடுகள் வியக்க வைக்கின்றது. குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை, ரோடு வசதி உள்ளிட்டவை, ஐ.எஸ்.ஓ., தரச் சான்றுக்கு ஏற்ப எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து ஊராட்சி முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, மகிழ்வனம் தாவரவியல் பூங்காவை பார்வையிட்டனர். சி.எஸ்.ஆர்., எனப்படும் சமூக பங்களிப்பு நிதியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், தரச் சான்றுக்கு ஏற்ப, ஊராட்சிகளை கட்டமைப்பது எவ்வாறு என்பது குறித்து, முன்னாள் ஊராட்சி தலைவர் பழனிசாமி விளக்கினார். தொடர்ந்து, ஊராட்சியில் பின்பற்றப்படும் பல்வேறு ஆவணங்களையும் குழுவினர் ஆய்வு செய்தனர்.