/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தனது பைக்கை நிறுத்திய திருடன் மற்றொரு பைக்குடன் 'பறந்தான்'
/
தனது பைக்கை நிறுத்திய திருடன் மற்றொரு பைக்குடன் 'பறந்தான்'
தனது பைக்கை நிறுத்திய திருடன் மற்றொரு பைக்குடன் 'பறந்தான்'
தனது பைக்கை நிறுத்திய திருடன் மற்றொரு பைக்குடன் 'பறந்தான்'
ADDED : பிப் 22, 2024 05:44 AM
அவிநாசி: அவிநாசி ஒன்றியம், வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மகாநகர் பகுதியில் ஒரு குடியிருப்பு உள்ளது.
தனியார் வங்கியில் பணிபுரியும் மணிமாறன், 26, என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார். நான்கு மாதம் முன்பு ரூ.2 லட்சம் மதிப்பிலான புதிய பைக்கை வாங்கினார். குடியிருப்பில் வசிக்கும், 'போர்டிகோ'வில் டூவீலர்களை நிறுத்துவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், தான் ஓட்டி வந்த டூவீலரை நிறுத்திவிட்டு, போர்டிகோவில் நிறுத்தப்பட்டிருந்த ஏழு டூவீலர்களையும் வீட்டிற்கு வெளியில் கொண்டு வந்து நிறுத்திவிட்டு மணிமாறனின் புதிய டூவீலரை மட்டும் திருடிச் சென்றார்.
இதில் மற்ற டூவீலர்களில் இருந்து எடுத்து மணிமாறனின் டூவீலருக்கு பெட்ரோலை ஊற்றி ஓட்டிச் சென்றுள்ளார். அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.