/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'சிசிடிவி'யில் சிக்கிய திருடர்கள்
/
'சிசிடிவி'யில் சிக்கிய திருடர்கள்
ADDED : பிப் 01, 2025 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்; பல்லடம் அடுத்த புளியம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார், 51. நகராட்சி அருகே உள்ள பத்திர எழுத்தர் அலுவலகத்தில் பணியாற்றுகிறார்.
நேற்று மதியம், தனது பைக்கை, அலுவலகம் அருகே நிறுத்தி சென்றார். மதிய உணவு இடைவேளையின் போது பார்க்கையில், பைக் மாயமானது.
அலுவலகத்தில் உள்ள 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்த போது, இருவர், பைக் திருடி சென்றது பதிவாகி இருந்தது.பல்லடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.