/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடியிருப்பு பகுதியில் 'மூன்றாவது கண்'
/
குடியிருப்பு பகுதியில் 'மூன்றாவது கண்'
ADDED : செப் 29, 2025 12:21 AM

அவிநாசி; திருமுருகன்பூண்டி எம்.ஜி.ஆர்.- என்.எஸ்.பி. நகர் குடியிருப்போர் நலச்சங்கம், தி கன்ஸ்யூமர்ஸ் கேர் அசோசியேஷன் ஆகியன இணைந்து நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கத்தை நடத்தின. இணைச்செயலாளர் வேதகிரி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கிறிஸ்டோபர் வரவேற்றார். சங்க தலைவர் காதர் பாட்சா பேசினார். போலீஸ் துணை கமிஷனர் பிரவீன் கவுதம், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் ஆகியோர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் பாதுகாப்பு நலன் கருதி 30 'சிசிடிவி' கேமராக்கள் செயல்பாட்டினை துவக்கி வைத்தனர்.
சலங்கை நிருத்யாலயா கலைக்கூட நிர்வாகி வடிவேல் வாழ்த்துரை வழங்கினார். பத்து ஆண்டுகள் சிறந்த நுகர்வோர் பாதுகாப்பு சேவை செய்தவர்களை சங்க நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் வாழ்த்தி கவுரவித்தனர். செயற்குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன் நன்றி கூறினார்.