/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போனசுடன் கணக்கு முடிப்பு; தொழிற்சங்கம் எதிர்ப்பு
/
போனசுடன் கணக்கு முடிப்பு; தொழிற்சங்கம் எதிர்ப்பு
ADDED : செப் 29, 2025 12:21 AM
திருப்பூர்; கோவை, திருப்பூர் மாவட்ட பனியன் தொழிலாளர் முன்னேற்ற சங்க செயற்குழு கூட்டம், குமரன்ரோடு அலுவலகத்தில் நடந்தது. பனியன் சங்க தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். பொதுசெயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் பூபதி முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் தங்கராஜ், முருகன், விஜயலிங்கபாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பனியன் தொழிலாளர்களுக்கு, கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதல் போனஸ் வழங்கப்பட வேண்டும். 'டைம்ரேட்' மற்றும் 'பீஸ்ரேட்' தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும். தொழிலாளருக்கு போனஸ் வழங்கும் போது, கணக்கு முடித்து வழங்குவதை கைவிட வேண்டும். ஓய்வு லீவு, பண்டிகை லீவுக்கான சம்பளம் கேட்டுப்பெற வேண்டும். பனியன் தொழிலாளர்களுக்கு, அக்., 2ம் தேதி முதல் சம்பள உயர்வு ஒப்பந்தம் முடிவடைகிறது. அதன்படி, விரைவில் பேச்சுவார்த்தை மூலம் காலம்கடத்தாமல் புதிய சம்பள உயர்வு வழங்க வேண்டுமென, பனியன் தொழில் அமைப்புகளுக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.