ADDED : ஜன 01, 2025 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், காமராஜர் கலாம் கல்வி அறக்கட்டளை சார்பில், திருக்குறள் உலக சாதனை விழா வரும் 26ம் தேதி மதியம் 2:00 மணிக்கு கணக்கம் பாளையம் ஊராட்சி, கிருஷ்ண மஹாலில் நடக்கிறது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் தலைமை வகிக்கின்றனர்.
இதன் செயலாளர் குமார் கூறுகையில், ''குழந்தைகளின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில், மாவட்டம் முழுவதும் இருந்து, ஐந்து முதல் பத்து வயது வரையிலான பள்ளி குழந்தைகள் கலந்து கொள்கின்றனர். 'ஒரு குழந்தைக்கு ஒரு குறள்' என்ற அடிப்படையில் நடத்தப்படுகிறது. அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதழ் மற்றும் திருக்குறள் புத்தகம் வழங்கப்படுகிறது'' என்றார்.

