/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருக்குறள் திட்ட சிறப்பு பயிலரங்கம்
/
திருக்குறள் திட்ட சிறப்பு பயிலரங்கம்
ADDED : பிப் 16, 2026 05:59 AM

உடுமலை: உடுமலை ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், தமிழ் வளர்ச்சித்துறையின், திருக்குறள் திருப்பணி திட்டத்தின் கீழ், பயிலரங்கம் நடந்தது. பள்ளி முதுகலை தமிழாசிரியர் தமிழ்செல்வி வரவேற்றார்.
பள்ளி முதல்வர் மாலா தலைமை வகித்தார். திருக்குறள் திருப்பணி திட்ட மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர் துரைஅங்குசாமி, கவிஞர் மாரிமுத்து, பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லுாரி இணை பேராசிரியர் சத்யகலா ஆகியோர் திருக்குறள் குறித்து பேசினர்.
விழாவை ஏற்பாடு செய்த ஆசிரியர்கள், பங்கேற்ற மாணவர்களுக்கும் ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவனங்களின் தலைவர் ராமசாமி, செயலர் கார்த்திக்குமார், பள்ளி முதல்வர் மாலா ஆகியோர் பாராட்டினர்.

