/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில்களில் சிவராத்திரி பூஜை துவக்கம்
/
கோவில்களில் சிவராத்திரி பூஜை துவக்கம்
ADDED : பிப் 16, 2026 06:00 AM

உடுமலை: உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில், மகா சிவராத்திரியையொட்டி நேற்று மாலை சிறப்பு பூஜைகள் துவங்கியது.
உடுமலை அருகே, கடத்தூரில் பழமை வாய்ந்த அர்ச்சுனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அமராவதி ஆற்றங்கரையில் சிவபெருமான் லிங்க வடிவில் சுயம்புவாக அருள் பாலிக்கும் சிறப்பு கொண்டது.
ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விழா நேற்று மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகப் பூஜையுடன் துவங்கியது. சோமவாரப்பட்டி அமரபுயங்கீஸ்வரர் கோவிலில் நான்கு கால பூஜைகள் ரிக்வேதத்துடன் துவங்கியது.
உடுமலை தில்லைநகர் ரத்தினாம்பிகை உடனுறை ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில், சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.
உடுமலை ருத்ரப்ப நகர் சித்தி விநாயகர் கோவிலில், சங்கு அபிேஷக பூஜை நடந்தது. ஏரிப்பாளையம் லட்சுமிநகர் பஸ் ஸ்டாப், பசுபதீஸ்வரர் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.
செல்லப்பம்பாளையம் ஸ்ரீ விசாலாட்சி உடனமர் ஸ்ரீ காசி பாணலிங்கேஸ்வரர் கோவிலில், சிவராத்திரி விழா சிறப்பு அலங்காரம், பூஜையுடன் துவங்கியது. இதே போல், வாளவாடி மாரியம்மன் கோவில் மற்றும் உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில் சிவராத்திரிக்கான முதற்கால யாக பூஜைகள் நேற்று மாலை துவங்கின.

