sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 இளம்பெண்ணிடம் சில்மிஷம் திருப்பூர் வக்கீலுக்கு 'வலை'

/

 இளம்பெண்ணிடம் சில்மிஷம் திருப்பூர் வக்கீலுக்கு 'வலை'

 இளம்பெண்ணிடம் சில்மிஷம் திருப்பூர் வக்கீலுக்கு 'வலை'

 இளம்பெண்ணிடம் சில்மிஷம் திருப்பூர் வக்கீலுக்கு 'வலை'


ADDED : பிப் 16, 2026 06:49 AM

Google News

ADDED : பிப் 16, 2026 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: தாராபுரத்தில், 19 வயது இளம்பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட வக்கீலை, போலீசார் தேடுகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்த, 19 வயது இளம்பெண். இவரது தந்தை, ஐந்து ஆண்டுக்கு முன் இறந்தார். தாய், இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

கடந்த மாதம் இரண்டாவது கணவரும் இறந்தார். அவரின் இரும்பு கடையை, தாய் மற்றும், மகள் கவனித்து வந்தனர்.

இரண்டாவது கணவரின் முதல் மனைவி, கடையில் உள்ள பொருட்கள், தங்களுக்கு சொந்தமானது என கூறி, கடையை காலி செய்யுமாறு பிரச்னை செய்தார். இருதரப்பிடம் பேசிய வக்கீல் சிவக்குமார், 23, இளம்பெண்ணுக்கு சாதகமாக பேசி முடித்தார்.

அதன் பின், வீட்டுக்கு செல்ல டூ -- வீலரில், அந்த பெண் கிளம்பியபோது, வீடு வரை துணையாக வருவதாக கூறி, சிவக்குமார் பின்னால் அமர்ந்து சென்றார். பூளவாடி சாலை காட்டு பகுதி அருகே பைக் சென்றபோது, சிவக்குமார் திடீரென பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்த புகாரின்படி, தாராபுரம் போலீசார், வழக்குப்பதிந்து தலைமறைவான சிவக்குமாரை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us