/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருமூர்த்திமலை கோவில், அருவிக்கு செல்ல தடை
/
திருமூர்த்திமலை கோவில், அருவிக்கு செல்ல தடை
ADDED : அக் 08, 2024 11:44 PM
உடுமலை : உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலைப்பகுதிகளில், கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவியில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பாதுகாப்பு கருதி, நேற்று முன்தினமும், நேற்றும் சுற்றுலா பயணியர் செல்ல தடை விதிக்கப்பட்டது.
நேற்று முன்தினம், தோணியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ள நீர் சூழ்ந்தது. நேற்று காலை, கோவிலில் துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டு, நடை திறக்கப்பட்டது.
பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். இந்நிலையில், நேற்று மீண்டும் மலைப்பகுதிகளில் கன மழை பெய்து, ஆற்றில் நீர் வரத்து அதிகரித்ததால், பிற்பகல், 3:30 மணிக்கு, கோவில் வளாகத்திலிருந்து, பக்தர்கள் வெளியேற்றப்பட்டதோடு, கோவில் நடை சாத்தப்பட்டது.