/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'திருப்பூர் சங்கமம்' நிகழ்ச்சி கோலாகலம்
/
'திருப்பூர் சங்கமம்' நிகழ்ச்சி கோலாகலம்
ADDED : ஜன 27, 2025 12:22 AM
திருப்பூர்; சிலம்பாட்டம், பறையாட்டம்,மயிலாட்டம் என, பாரம்பரிய தமிழர் கலை இசை நிகழ்ச்சியுடன், 'திருப்பூர் சங்கமம்' நிகழ்ச்சி நேற்று நடந்தது.
திருப்பூர் ஏற்றுமதி நிறுவன அலுவலர்கள் சங்கம் (டீசா) சார்பில், 'திருப்பூர் சங்கமம்' என்ற தமிழர் கலைவிழா நேற்று, ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்தது. குத்துவிளக்கு ஏற்றிவைத்து, தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது.
ஸ்ரீசண்முகாலயா இசைப்பள்ளி மற்றும் சாய் கிருஷ்ணா நுண்கலைக்கூடம் மாணவ, மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
டீசா பொதுசெயலாளர் ஐயப்பன் வரவேற்றார். நிறுவன நிர்வாகிகள் மணிமாறன், அஷ்ரப்அலி முன்னிலை வகித்தனர். நிறுவன தலைவர் சுரேஷ்பாபு தலைமை வகித்தார். சிலம்பாட்டம், பறையாட்டம், மாடு ஆட்டம், துடும்பாட்டம், கருப்புசாமி ஆட்டம், அம்மன் ஆட்டம், மயிலாட்டம், மண் இசை பாடல், கரகாட்டம், புல்லாங்குழல், கடம் போன்ற பல்வேறு கலைஇசை நிகழ்ச்சிகள் நடந்தன.
திருப்பூர் தாய்த்தமிழ் பள்ளி மாணவ, மாணவியர் 50 பேர் கொண்ட குழுவின், சிறப்பு பறையிசை, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
நிகழ்ச்சியில், திருப்பூர் தொழில் அமைப்பு நிர்வாகிகள், ஏற்றுமதி நிறுவன அலுவலர்கள் மற்றும் குடும்பத்தினர் திரளாக பங்கேற்றனர்.

