sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

முத்தூட் நிறுவனத்தில் நகை கொள்ளை: ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை

/

முத்தூட் நிறுவனத்தில் நகை கொள்ளை: ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை

முத்தூட் நிறுவனத்தில் நகை கொள்ளை: ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை

முத்தூட் நிறுவனத்தில் நகை கொள்ளை: ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை


ADDED : செப் 27, 2011 12:53 AM

Google News

ADDED : செப் 27, 2011 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : முத்தூட் நிதி நிறுவனத்தில் நடந்த கொள்ளையில் ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.திருப்பூரில் முத்தூட் நிதி நிறுவனத்தில் கடந்த 24ம் தேதி காலை புகுந்த கொள்ளையர்கள், 1,381 சவரன் நகை மற்றும் 2.36 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

கொள்ளையர்களை பிடிக்க, 66 பேர் கொண்ட 11 தனிப்படை அமைத்து போலீசார் தமிழகம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.எஸ்.பி., பாலகிருஷ்ணன் மேற்பார்வையில், கொள்ளை சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.இதில், போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது; முதலில் ஆறு பேர் ஊழியர்கள் கூறிய நிலையில், நான்கு பேர் மட்டுமே ஊழியர்களாக உள்ளனர். சம்பவம், காலை 8.30 மணிக்கு துவங்கி, 9.15 மணிக்குள் முடிந்துள்ளது. 45 நிமிடங்களில் ஐந்து ஊழியர்களையும் கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி, கை, கால் கொள்ளையர்கள் கட்டியுள்ளனர். பின், வாய் மற்றும் கண்ணுக்கு கம்டேப் கொண்டு ஒட்டியதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.புதிய ஆட்கள் லாக்கரை திறக்க முடியுமா? முத்தூட் மினி நிறுவனத்தில் அலுவலகத்துக்குள் நுழைந்தவுடன் நீண்ட டேபிள் உள்ளது. அதற்கும் உள்ளே சென்றால் லாக்கர் அறை உள்ளது. இந்த அறையின் கதவு 2 டன் எடையுள்ள இரும்பு கதவாகும். அதிநவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முதலில் இரண்டு சாவிகளை பயன்படுத்த வேண்டும்.இரண்டு சாவிகளையும் இரு வேறு நபர்கள் பயன்படுத்த வேண்டும்; இரண்டு நபர்களும் ஒரே சமயத்தில் இடது புறம் திருப்ப வேண்டும்; தொடர்ந்து வலது புறம் திருப்ப வேண்டும். இது முறையாக செய்ய வேண்டும். ஒருவர் மாற்றி திறந்தாலும், கதவு திறக்காது.இந்த முறையில் 'லாக்' எடுத்த பிறகு, உடனடியாக கால அவகாசம் இல்லாமல் மூன்றாவதாக கதவை திறக்கும் 'மாஸ்டர் கீ' எனப்படும் பிரதான சாவியை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு, மூன்று சாவிகளில் ஐந்து லாக் சிஸ்டத்தை முறையாக பயன்படுத்தினால் மட்டுமே நகைகள் வைத்திருக்கும் அறையை திறக்க முடியும். இந்த முறையில் சிறிய தவறு ஏற்பட்டால் கூட கதவை திறக்க முடியாது. இவ்வாறு 'லாக் சிஸ்டம்' உள்ள கதவை எளிதாக கொள்ளையர்கள் திறந்தது எப்பது என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.



தொடர்ந்து, லாக்கரை திறந்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் குறிப்பிட்ட நகைகளை மட்டும் எடுத்துள்ளனர்.எனவே, கொள்ளையர்களுக்கு, முத்தூட் மினி நிறுவனத்தில் உள்ள பாதுகாப்பு அறை அமைப்பு குறித்த முன்னதாக அனைத்து விபரங்களும் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. அரை மணி நேரத்தில் எளிதாக கொள்ளையர்கள் கொள்ளையை அரங்கேற்றியது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதே போல் 9.15 மணிக்குள் கொள்ளை நடந்து, கொள்ளையர்களால் கட்டி வைக்கப்பட்ட ஊழியர்கள் ஜன்னலை திறந்து உதவிக்கு மற்றவர்களை அழைத்ததாகவும், முக்கால் மணி நேரம் கழித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால், போலீஸ் செக்போஸ்ட்கள் 'அலர்ட்' செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.கொள்ளைக்கு பயன்படுத்திய கத்தி, கயிறு மற்றும் பனியன் வேஸ்ட் துணிகள் என அனைத்தும் புதிதாக இருந்துள்ளது.எனவே, ஊழியர்கள் யாராவது இதற்கு உடந்தையாக இருந்திருக்கலாமா; முன்பு பணியாற்றிய அல்லது இதே லாக்கிங் சிஸ்டம் உள்ள வேறு அலுவலகத்தில் பணியாற்றிவர்களா என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. வன்னியப்பெருமாள், கோவை சரக டி.ஐ.ஜி., பாலநாகதேவி நேற்று திருப்பூர் வந்தனர். முத்தூட் கொள்ளை சம்பவம் குறித்து போலீசாரிடம் ஆலோசனை நடத்தினர்.










      Dinamalar
      Follow us