/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போலீஸ் ஸ்டேஷன்னா இப்படித்தான் இருக்கணும்
/
போலீஸ் ஸ்டேஷன்னா இப்படித்தான் இருக்கணும்
ADDED : அக் 18, 2025 11:33 PM

மாவட்டத்தில், அதிகப்படியான குற்ற சம்பவங்கள், வழக்கு விசாரணைகள் நடக்கும் ஸ்டேஷன்களில் பல்லடமும் ஒன்று. பல்லடம் ஸ்டேஷனில், 80க்கும் மேற்பட்ட போலீசார் வேலை பார்க்கின்றனர்.
முன்னதாக, கடந்த ஐந்து மாதங்கள் முன் ஸ்டேஷன் பராமரிப்பு பணிகள் துவங்கின. பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த கட்டமைப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு, புகார் அளிக்கப்படும் பொதுமக்களுக்கு வசதியாக, இருக்கைகள், மின்விசிறியுடன் கூடிய காத்திருப்பு அறை, குடிநீர், கழிப்பிடம், வாகன பார்க்கிங் வசதி உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில், புகார் அளிக்க வந்த பொதுமக்கள், உட்கார இடம் இன்றி, மணிக்கணக்கில் காத்திருந்த நிலையில், இன்று, புகார் அளிக்க வருபவர்களை அமர வைத்து போலீசார் விசாரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஸ்டேஷன் வளாகம் முழுவதும், பல்வேறு விழிப்புணர்வு ஓவியங்களுடன் கூடிய வாசகங்கள், பொதுமக்களை ஈர்க்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளன.
இத்துடன், பூச்செடிகள், மரங்கள் வைக்கப்பட்டு முன்மாதிரி போலீஸ் ஸ்டேஷனாக உருவாக்கப்பட்டு வருகிறது. புகார் அளிக்க வரும் பொதுமக்கள், 'இப்படித்தான் இருக்கணும் ஸ்டேஷன்' என்று கூறும் வகையில், பல்லடம் போலீசார், ஸ்டேஷனை அசத்தலாக வடிவமைத்து வருகின்றனர்.
---
பல்லடம் போலீஸ் ஸ்டேஷன்
ஸ்டேஷனில் உள்ள பொதுமக்கள் காத்திருப்புக்கூடம்.