ADDED : ஆக 11, 2025 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருமாநல்லுார்; திருப்பூர் ஒன்றியம், வள்ளிபுரம் ஊராட்சி, அப்துல் கலாம் நகரில் வசித்து வருபவர் மணி, 63. கட்டட தொழிலாளி. கடந்த ஜூலை, 26ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார். வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு ஆறே கால் சவரன் நகை, 150 கிராம் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது தெரியவந்தது.
பெருமாநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து திருட்டில் ஈடுபட்ட சூரியதேவ் பிரகாஷ், 38, முருகானந்தம், 46, ஹக்கீம், 40, ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.