/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆசிரியரை தாக்கிய வழக்கு; மாணவர் உட்பட 3 பேர் கைது
/
ஆசிரியரை தாக்கிய வழக்கு; மாணவர் உட்பட 3 பேர் கைது
ADDED : பிப் 16, 2025 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்; பல்லடம் அருகே ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. மாணவர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்ட நிலையில், பள்ளியில் இருந்த ஆசிரியர் மாணிக்கம், மாணவர்களின் மோதலை தடுக்க முயன்றார். அப்போது, மாணவர்கள் சிலர், ஆசிரியரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
ஆசிரியர் மாணிக்கம் அளித்த புகாரின் பேரில், பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், கணபதிபாளையம் மாதேஸ்வரன் நகரை சேர்ந்த கட்டட தொழிலாளி தனபால், 22 மற்றும் பள்ளி மாணவர்கள் இருவர் என, 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.