ADDED : பிப் 25, 2024 01:26 AM

திருப்பூர்:''லோக்சபா தேர்தலில், பா.ஜ., - தி.மு.க., - அ.தி.மு.க., என மும்முனை போட்டி நிலவும்,'' என, ம.தி.மு.க., முன்னாள் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தெரிவித்தார்.
திருப்பூரில் அவர் நேற்று கூறியதாவது:
லோக்சபா தேர்தலில் பா.ஜ., - அ.தி.மு.க., -தி.மு.க., என்ற மும்முனை போட்டி தான் ஏற்படும். பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., சேர்வதற்கு வாய்ப்பில்லை.
பேச்சால், உணர்வால் சேர்ந்த கூட்டமெல்லாம் அப்போது தான். இப்போது, அப்படி ஒரு கூட்டம் எந்தக் கட்சிக்கும் சேராது. இந்த கட்சிக்கு இந்த ஓட்டு சதவீதம் என்பதெல்லாம் இப்போது இருக்க வாய்ப்பு இல்லை.
திருப்பூரில், 2005ல் நடந்த எம்.எல்.எப்., தொழிற்சங்க மாநாட்டில், அப்போதைய மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்திரசேகரராவ், திருப்பூருக்கு, 100 படுக்கை வசதியுடன் இ.எஸ்.ஐ., மருத்துவமனை வருமென அறிவித்தார். அரசாணையும் வெளியிடப்பட்டது.
இதன் திறப்பு விழா, 14 ஆண்டுகளுக்கு பின் இன்று நடக்கவுள்ளது. குஜராத்தில் இருந்தபடி, வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். திருப்பூரில் இதற்கான ஏற்பாடுகள் எதுவும் இல்லாதது வேதனையளிக்கிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.

