/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளிகளில் உயர்தர ஆய்வகத்திற்கு மும்முனை மின்சார இணைப்பு
/
பள்ளிகளில் உயர்தர ஆய்வகத்திற்கு மும்முனை மின்சார இணைப்பு
பள்ளிகளில் உயர்தர ஆய்வகத்திற்கு மும்முனை மின்சார இணைப்பு
பள்ளிகளில் உயர்தர ஆய்வகத்திற்கு மும்முனை மின்சார இணைப்பு
ADDED : ஏப் 02, 2025 07:52 PM
உடுமலை; அரசு நடுநிலைப்பள்ளிகளில் உயர்தர ஆய்வகம் அமைப்பதற்கு, மும்முனை மின்சார இணைப்பு மாற்றி வழங்க, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அரசு நடுநிலைப்பள்ளிகளில், கம்ப்யூட்டர் வசதிகளுடன் கூடிய உயர்தர ஆய்வகங்கள் அமைக்கும் பணிகள், கடந்த கல்வியாண்டின் இறுதியில் இருந்து துவக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான பணிகள் ஒவ்வொரு கட்டமாக நடக்கிறது.
உயர்தர ஆய்வகங்களுக்கு, போதுமான அளவு மின்சார வசதி ஏற்படுத்துவதற்கு, திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், மொத்தமாக, 223 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில், உயர்தர கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் அமைக்கப்படுகின்றன.
இதில், உடுமலை ஒன்றியத்தில், 18 பள்ளிகளும், மடத்துக்குளத்தில் 12ம், குடிமங்கலத்தில் 9ம் அடங்கும். அனைத்தும் மும்முனை (3 பேஸ்) மின்சார இணைப்பு வழங்குவதற்கு, அந்தந்த ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுப்பதற்கு, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், ஊராட்சி நிர்வாகத்தினர், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் விபரங்களை மின்சாரத்துறைக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.