/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இடி - மின்னலுடன் தலைகாட்டிய மழை
/
இடி - மின்னலுடன் தலைகாட்டிய மழை
ADDED : ஏப் 05, 2025 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; சுட்டெரிக்கும் கோடை வெயில் தாக்கத்தை குறைக்கும்வகையில், திருப்பூரில் மழை எட்டிப்பார்க்க துவங்கியுள்ளது.
திருப்பூர் நகர பகுதிகளில், நேற்றுமுன்தினம், மாலை நேரம் லேசான துாறல் மழையாக பெய்தது. நேற்று மாலை, 6:00 மணி முதல் வானிலை சட்டென மாறியது. 8:20 மணியளவில் துாறலுடன் மழை துவங்கியது. இடியுடன் மின்னலும் வெட்டியதால், பலத்த மழை பெய்யும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், லேசான மழை பெய்து, சில நிமிடங்களிலேயே ஓய்ந்துவிட்டது.
காலையில் வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், மாலை நேரம் தலைகாட்டிச் செல்லும் மழையால், திருப்பூரில் இரவு நேரங்களில் குளுமை நிலவுகிறது. இதனால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.