/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாய நிலங்களில் மரச்சாகுபடி திட்டம்; வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் தீவிரம்
/
விவசாய நிலங்களில் மரச்சாகுபடி திட்டம்; வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் தீவிரம்
விவசாய நிலங்களில் மரச்சாகுபடி திட்டம்; வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் தீவிரம்
விவசாய நிலங்களில் மரச்சாகுபடி திட்டம்; வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் தீவிரம்
ADDED : செப் 07, 2025 09:14 PM

உடுமலை; வனத்துக்குள் திருப்பூர்-11 திட்டத்தின் கீழ், விவசாய நிலங்களை பசுமையாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில், வனத்துக்குள் திருப்பூர் திட்டம், கடந்த, 10 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு, 11வது திட்டத்தின் கீழ், 3 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் தீவிரமடைந்துள்ளது.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், நீர் பற்றாக்குறை, தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக பயிர் சாகுபடி செய்ய முடியாத நிலையில், சூழல் பாதுகாப்பு, வருவாய் அடிப்படையில், விவசாய நிலங்களில் மரம் வளர்க்கவும் ,வருவாய் பெருக்கும் வகையிலும், மரச்சாகுபடி திட்டமாக விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நடவு அதிகரித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், உடுமலை ஆர்.வேலுார், சவுந்தரராஜூக்கு சொந்தமான விவசாய நிலத்தில், 475 மகா கனி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
அதே போல், ஆர்.வேலுார் விவசாயி வெங்கடேசுக்கு சொந்தமான நிலத்தில், 445 மகா கனி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. மேலும், எலையமுத்துார், பெருமாள் புதுாரை சேர்ந்த, விவசாயி வெங்கடாசலத்திற்கு சொந்தமான நிலத்தில், மகா கனி, 100, செம்மரம், 100, தேக்கு, 50, பலா,10, நாவல்,5, சொர்க்கமரம், 10 என, 275 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், விவசாய நிலங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பள்ளி, கல்லுாரி, கோவில் வளாகங்கள், கோழிப்பண்ணை, தொழிற்சாலை வளாகங்களில், இலவசமாக மரக்கன்றுகள் நடவு செய்து தரப்படுகிறது.
மரக்கன்றுகள் நடவு செய்து, பராமரித்து பசுமை பரப்பை அதிகரிக்கும் பணியில் ஆர்வம் உள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திட்டக்குழுவினர் தெரிவித்தனர்.