UPDATED : நவ 18, 2026 12:00 AM
ADDED : நவ 17, 2026 11:12 PM
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்க (சி.ஐ.டி.யு.) தலைவர்கவுதமன், கலெக்டர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஆகியோரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் மாவட்டத் திலுள்ள ரேஷன் கடைகளுக்கு, உணவுப்பொருட்கள் சரியான நேரத்தில் அனுப்பப்படுவதில்லை. விடுமுறை நாட்கள் மற்றும் ரேஷன் கடை வேலை நாட்களில், மாலை, 6:00 மணிக்கு மேல் அனுப்பப்படுகிறது. இதனால் விற்பனையாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
குறிப்பாக, ரேஷன் பணியாளர்கள், வெவ்வேறு பகுதிகளிலிருந்து பணிக்கு வந்து செல்கின்றனர். பொருட்களை இறக்கிவைக்கவேண்டியுள்ளதால், மலை நேரம் வீட்டுக்கு செல்ல தாமதம் ஏற்படுகிறது.
ஆகவே பணி நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் ரேஷன் பொருட்கள் அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
