/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பருத்தி சீசன் விடைபெறும் நேரம்; பஞ்சு வரத்து திடீர் அதிகரிப்பு
/
பருத்தி சீசன் விடைபெறும் நேரம்; பஞ்சு வரத்து திடீர் அதிகரிப்பு
பருத்தி சீசன் விடைபெறும் நேரம்; பஞ்சு வரத்து திடீர் அதிகரிப்பு
பருத்தி சீசன் விடைபெறும் நேரம்; பஞ்சு வரத்து திடீர் அதிகரிப்பு
ADDED : செப் 25, 2024 12:18 AM
திருப்பூர் : பருத்தி ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், இருப்பு வைத்திருந்த பஞ்சு வரத்து அதிகரித்துள்ளது.
நடப்பு பருத்தி ஆண்டு, வரும் 30ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அக்., 1ம் தேதி முதல், புதிய பருத்தி ஆண்டு துவங்குகிறது. நடப்பு நிதியாண்டில், 320 லட்சம் பேல் அளவுக்கு, பஞ்சு மகசூல் இருக்குமென, கணக்கிடப்பட்டிருந்தது.
அதன்படி, நடப்பு பருத்தி ஆண்டில், கடந்த மாத இறுதி நிலவரப்படி, 314 லட்சம் 'பேல்' அளவிலான பஞ்சு விற்பனை நடந்திருந்தது.
கடந்த மாத இறுதியில், தினசரி பஞ்சு வரத்து, 3,500 பேல்களாக குறைந்திருந்தது. இந்நிலையில், இம்மாத துவக்கத்தில் இருந்து மீண்டும் வரத்து அதிகரித்தது; நேற்றைய நிலவரப்படி, 15 ஆயிரத்து, 700 பேல் அளவுக்கு உயர்ந்துள்ளது.
இதுகுறித்து நுாற்பாலை உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது:
பருத்தி ஆண்டு நிறைவடையும் நிலையில், இருப்பு வைத்துள்ள பஞ்சு விற்பனைக்கு வருவது அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தை காட்டிலும், மூன்று மடங்கு அதிகமாக தினசரி பஞ்சு வரத்து உயர்ந்துள்ளது. அறுவடை துவங்கியிருப்பதால், அடுத்தமாத மத்தியில் இருந்து, புதிய பஞ்சு வரத்து துவங்க வாய்ப்புள்ளது.
கடந்த ஆண்டு இருந்ததை காட்டிலும், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களின், நுால் கொள்முதல் சற்று உயர்ந்துள்ளது. ஏற்றுமதி ஆர்டர் வரத்து அதிகரித்துள்ளதால், நுால் விற்பனையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.