ADDED : டிச 17, 2024 09:48 PM

உடுமலை; சபரிமலை சீசன் காரணமாக, உடுமலை திருமூர்த்திமலைக்கு சுவாமி ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
மார்கழி மாதம் துவங்கியுள்ள நிலையில், அதிகாலை, 5:30 மணிக்கு, சிறப்பு பூஜைகள் மற்றும் பஜனை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், சபரி மலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால், சபரிமலை சீசன் களைகட்டியுள்ளது.
பல்வேறு மாவட்டங்களிலிருந்து தினமும் நுாற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள், அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வந்து, தோணியாற்றில் நீராடி, மும்மூர்த்திகளை வழிபட்டு செல்கின்றனர்.
திருமூர்த்திமலைப்பகுதிகளில், பெய்த கன மழையால், பஞ்சலிங்க அருவியில், நீர்வரத்து சீரான நிலைக்கு வராமல், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், நேற்றும் பஞ்சலிங்க அருவிக்கு சுற்றுலா பயணியர் மற்றும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.