sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருப்பூர் - போத்தனுார் வழி: சபரிமலைக்கு 2 சிறப்பு ரயில்

/

திருப்பூர் - போத்தனுார் வழி: சபரிமலைக்கு 2 சிறப்பு ரயில்

திருப்பூர் - போத்தனுார் வழி: சபரிமலைக்கு 2 சிறப்பு ரயில்

திருப்பூர் - போத்தனுார் வழி: சபரிமலைக்கு 2 சிறப்பு ரயில்


ADDED : நவ 11, 2025 12:37 AM

Google News

ADDED : நவ 11, 2025 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: சபரிமலை மண்டல பூஜை வரும், 17 ம் தேதி துவங்க உள்ள நிலையில், பக்தர்கள் வசதிக்காக, திருப்பூர் - போத்தனுார் வழியில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மசூலிப்பட்டிணம் - கொல்லம் சிறப்பு ரயில் (எண்:07101), இம்மாதம், 14, 21, 28, டிச. 26 மற்றும் ஜன. 2 ஆகிய தேதிகளில், (வெள்ளிக்கிழமை) இயங்கும். வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணிக்கு மசூலிப்பட்டிணத்தில் புறப்பட்டு, மறுநாள் (சனிக்கிழமை) இரவு 10:00 மணிக்கு, கொல்லம் சென்றடையும்.

சனிக்கிழமை காலை 10:28 மணிக்கு ரயில் திருப்பூர் வரும். மறுமார்க்கமாக, கொல்லம் - மசூலிப்பட்டிணம் ரயில் (எண்:07102) இம்மாதம், 16, 23, 30, டிச. 28 மற்றும் ஜன. 4ம் தேதிகளில், (ஞாயிற்றுக்கிழமை) இயங்கும்.

நரசாபூர் - கொல்லம் சிறப்பு ரயில் (எண்: 07105), வரும், 16 மற்றும், 18 ம் தேதியும், கொல்லம் - நரசாபூர் சிறப்பு ரயில் (எண்:07106) வரும், 18 மற்றும், 20ம் தேதியும் இயங்கும்.

சிறப்பு ரயில் இயக்கம், நேரம், முன்பதிவு குறித்த விபரங்களை ரயில்வே ஸ்டேஷன் தகவல் மையத்தில் பயணிகள் அறிந்து கொள்ளலாம் என ரயில்வே வணிகப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us